ஹோம் /தஞ்சாவூர் /

இனி உங்க காசே வேணாம்.. எங்களுக்கு ரோடு போட்டு கொடுங்க.. கதறும் தஞ்சை மக்கள்!!

இனி உங்க காசே வேணாம்.. எங்களுக்கு ரோடு போட்டு கொடுங்க.. கதறும் தஞ்சை மக்கள்!!

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Thanjavur Latest News | தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள மகரிஷி நகர் வீரபாண்டியன் நகர் ஆகிய இரண்டு பகுதிகளிலும் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் மழைக்காலத்தின் போது மழை நீர் இயங்குவதால் தெருக்கள் முழுவதும் சேரும் சகதியுமாக இருப்பதுடன் மட்டுமின்றி வீட்டிற்குள் மழை நீர் செல்லும் அவலம்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர்  மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள தெருக்களில் சாலை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக அவதிப்படும்  மக்கள்..

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள மகரிஷி நகர் வீரபாண்டியன் நகர் ஆகிய இரண்டு பகுதிகளிலும் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் மழைக்காலத்தின் போது மழை நீர் இயங்குவதால் தெருக்கள் முழுவதும் சேரும் சகதியுமாக இருப்பதுடன் மட்டுமின்றி வீட்டிற்குள் மழை நீர் செல்லும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

மாரியம்மன் கோவில் மகரிஷி நகர்: கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு போடுவதாக கூறப்பட்ட சாலை பணிகள் கற்கள் மண் ஆகியவற்றை போட்டு பணிகள் பாதியிலேயே நின்ற நிலையில் இதுவரையிலும் அந்த சாலையின் பணிகளை தொடரவில்லை ஏற்கனவே போடப்பட்ட கற்கள் மட்டும் மண்கள் சிதறி போய் இடமே தெரியாமலே இருக்கிறது. ஏழு ஆண்டுகளாகியும் சாலை போடப்படுவதாக கூறி ஏமாற்றுகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் சாலை போடப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

மாரியம்மன் கோயில் வீரபாண்டி நகர்- 17 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை 10 ஆண்டுகளிலேயே சேதமடைந்துள்ளதால் மழைநீர் தேங்கி தெரு முழுவதும் சேரும் சகதியுமாக இருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை 10 ஆண்டுகள் கூட தாங்கவில்லை.  சாலையின் தரம் சரியில்லாததாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அப்போது மக்கள் கூறுகின்றனர்.

மேலும் இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில்:

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்தனை ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகி கொண்டிருக்கின்றோம். தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க மட்டும் வந்திருவாங்க தேவையான வசதிகள் அமைத்து தருவதாகவும் சொல்றாங்க, ஆனா இந்த பக்கம் வந்து என்னன்னு கூட பாக்கல இவங்க கொடுக்கிற 500 ரூ 200 ரூ ஆசைப்பட்டது தப்பா போச்சு இனி உங்க காசே வேணாம். எங்களுக்கு ரோடு போட்டு கொடுங்க என்று கடும் கோபத்துடன் கூறுகின்றனர்‌.

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur