ஹோம் /தஞ்சாவூர் /

மகாளய அமாவாசை தஞ்சை அனுமார் கோவிலில் இத்தனை வழிபாடுகளா? 

மகாளய அமாவாசை தஞ்சை அனுமார் கோவிலில் இத்தனை வழிபாடுகளா? 

தஞ்சை

தஞ்சை

Mahalaya Amavasi Thanjai Anumar temple | மகாளய அமாவாசையில் இத்தனை சிறப்பு வாய்தவைகளாக இருக்கின்றன. இருந்த போதிலும், சிவன் கோவில்களில் தான் இத்தனை சிறப்புகளாக பூஜைகள்  செய்யப்படும். ஆனால் தஞ்சையில் அமாவாசையின் போது, அனுமாருக்கு இத்தனை சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

மகாளய அமாவாசை எத்தனை சிறப்பு வாய்ந்தவைகளாக இருக்கின்றன. இருந்தபோதிலும், சிவன் கோவில்களில் தான் இத்தனை சிறப்புகளாக பூஜைகள் செய்யப்படும். ஆனால் தஞ்சையில் அமாவாசையின்போது, அனுமாருக்கு இத்தனை சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் செய்யப்படுவதே தனிச் சிறப்பாக காணப்படுகிறது.

தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை அனுமார் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற மஞ்சள் பூசிய தேங்காயை தங்களது இல்லத்தில் இருந்து எடுத்து வந்து மூலை அனுமாரை புகழ்பெற்ற ராசி மண்டலம் சிற்பத்தில் அவரவர் ராசிக்கு கீழ் நின்று தரிசனம் செய்து மனம் உருகி தரிசனம் செய்வார்கள்.

இதையும் படிங்க ; வடகிழக்கு பருவ மழை: மீட்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க தஞ்சை கலெக்டர் உத்தரவு

பின்னர் காணிக்கையாக ரூ.18 உண்டியலில் செலுத்தி சிதறு தேங்காய் உடைத்தால் திருமண தடைகள் நீங்கும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். பூர்வ ஜென்மம், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் மற்றும் கர்ம வினைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் வரும் 25ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு காலை 7 மணிக்கு லட்ச ராமநாமம் ஜெபம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகள் நிவர்த்தியாகும். தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாலை 6 மணிக்கு கனிகளால் ஆன சிறப்பு அலங்காரமும், 6.30 மணிக்கு அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் அதனையடுத்து 1,008 எலுமிச்சை பழங்கள் மாலை சாற்றி தீபாராதனையும் நடைபெறுகிறது. மூலை அனுமாருக்கு மகாளய அமாவாசை அன்று பழங்களால் ஆன மாலை சாற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore