ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர்- அச்சுறுத்தும் மாண்டஸ் புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தஞ்சாவூர்- அச்சுறுத்தும் மாண்டஸ் புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

X
மாதிரிப்

மாதிரிப் படம்

mandous cyclone | தஞ்சாவூர் மாண்டஸ் புயல் எச்சரிக்கையின் காரணமாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

மாண்டாஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்திறங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. பின்னர் புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

புயல் எதிரொலியாக 8, 9, 10 தேதிகளில் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகப் பலத்த கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு தலா 25 பேர் அடங்கிய குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்துக்கு எஸ்.ஐ அலோக் குமார் சுக்லா, பாட்டீல் ஆகியோரது தலைமையிலான 25 பேர் அடங்கிய குழுவினர் வெள்ள தடுப்பு மீட்பு உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்களுடன் வந்தனர். அந்த குழுவினர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்தனர். அவர்களுக்கு ஆட்சியர் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எடுத்துரைத்து தயாராக இருக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்ட

சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் சுமார் 150 விசைப்படகுகள், 32 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், வருவாய், உள்ளாட்சி, சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய அனைத்து துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள், 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 7 புயல் பாதுகாப்பு மையங்கள், 30 படகுகள், 143 கனரக இயந்திரங்கள், 617 அறுவை இயந்திரங்கள், 99 மரம் வெட்டும் இயந்திரங்கள், 113 ஜெனரேட்டர்கள், 37 தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள், 17,325 மணல் மூட்டைகள், 30,672 தடுப்பு கம்புகள், 4,500 முதல் நிலை பணியாளர்கள் மற்றும் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் 200 முதல்நிலை பணியாளர்கள் ஆகியோர் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், 24 மணி நேரமும் இயங்க கூடிய மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் (04362-264115, 264117, மொபைல் எண். 9345336838) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சையில் இன்று முழுவதும் மழை பொலிவு பெரிதளவில் இல்லாமல் வானம் மேக மூட்டத்துடனே காணப்பட்டது. மாலையில் மருங்குளம் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் தஞ்சையில் கஜா புயலை போல இதுவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் தஞ்சை மக்கள் இருக்கின்றனர்.

First published:

Tags: Local News, Thanjavur