ஹோம் /தஞ்சாவூர் /

விபத்து, ஒலி,மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம்.. தஞ்சையில் பொதுமக்களுக்கு வேண்டுகோள்..! 

விபத்து, ஒலி,மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம்.. தஞ்சையில் பொதுமக்களுக்கு வேண்டுகோள்..! 

தஞ்சை

தஞ்சை

Thanjavur Latest News | பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு தஞ்சாவூர் பொதுமக்களிடம் வேண்டுகோள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம் என தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொதுமக்களுக்கான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதன்படி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஆர்.குணசேகரன் தஞ்சை பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையாவது, “ எதிர்வரும் தீபாவளி பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் கடைபிடிக்க வேண்டியவையாக பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த காற்று மாசுபடுத்தும் தன்மையுள்ள பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

மேலும் படிக்க:  தஞ்சையில் தீபாவளி மருந்து அமோக விற்பனை.. இதன் பயன் என்ன?

பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு பொதுமக்களிடம் தஞ்சாவூர் புகைவண்டி நிலைய முன் துண்டறிக்கை வழங்கியும் ஆட்டோ ஒலிபெருக்கி வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஆர். குணசேகரன் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி அலுவலர் திரு. எம். மோகன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட பொருளாளர் திரு. முத்துக்குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. M.G ரவிச்சந்திரன் ஜுனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் முனைவர் பிரகதீசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தஞ்சாவூர் கோட்ட அலுவலகம் செய்திருந்தது.

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Thanjavur