தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 14 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,224 இடங்களுக்கான மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 5ம் தேதி துவங்குகிறது. 10ம் தேதி வரை நடக்கிறது. கலந்து கொள்ளும் மாணவிகள் காலை 9 மணிக்கு பங்கேற்கலாம்.
இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவிகளின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு சேர்க்கைக்கான விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.
மாணவிகள் அனைத்து அசல் சான்றிதழ்கள், 3 நகல்கள், சிறப்பு கட்டணம் ஆகியவற்றுடன் வர வேண்டும். வரும் 5ம் தேதி சிறப்பு ஒதுக்கீடு(விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி) மாணவிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
6-ந் தேதி பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி, கணிதம், பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 8-ம் தேதி பி.ஏ. தமிழ், பி.ஏ வரலாறு, பி.பி.ஏ, பி.எஸ்.சி வேதியியல், பி.எஸ்.சி இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கும், 10-ம் தேதி பி.எஸ்.சி தாவரவியல், பி.எஸ்.சி விலங்கியல், பி.எஸ்.சி பொருளாதாரம், பி.எஸ்.சி புள்ளியியல், பி.எஸ்.சி நிலவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
மாணவிகள் மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். மாணவிகள் முககவசம் அணிந்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி தெரிவித்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.