முகப்பு /தஞ்சாவூர் /

மோசமான நிலையில் உள்ள கொண்டிராஜபாளையம் ரவுண்டானா.. தஞ்சை மாநகராட்சி கவனிக்குமா?

மோசமான நிலையில் உள்ள கொண்டிராஜபாளையம் ரவுண்டானா.. தஞ்சை மாநகராட்சி கவனிக்குமா?

X
கொண்டிராஜபாளையம்

கொண்டிராஜபாளையம் ரவுண்டானா

Thanjavur News | தஞ்சை கொண்டிராஜபாளையம் ரவுண்டானாவை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியில் பழமைவாய்ந்த மன்னர் கால பீரங்கி மேடு, தற்காலிக மீன் மார்க்கெட், பிரசித்திப்பெற்ற வெள்ளை பிள்ளையார் கோவில் மற்றும் பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இதன் காரணமாக இங்கு எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக கொண்டிராஜபாளையத்தில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அதில் உயர் மின் கோபுர விளக்கும் பொருத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஒட்டிகள் அச்சமின்றி சென்று வந்தனர்.

இந்நிலையில், கொண்டிராஜபாளையம் ரவுண்டானா முறையான பராமரிப்பின்றி காணப்பட்டு வந்தது. இதன் காரணமாக

ரவுண்டானா முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து, புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும், தற்போது ரவுண்டானாவில் உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் ரவுண்டானாவில் உள்ள மண் சரிந்து சாலையில் விழுகிறது. மேலும் உயர் மின் கோபுர விளக்கும் பல மாதங்களாக எரியாத நிலையில் வலுவிழந்து கீழே விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

இதன் காரணமாக அந்த வழியாக வாகன ஒட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொண்டிராஜபாளையம் ரவுண்டானாவை சீரமைத்து புதுப்பொலிவுடன் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Thanjavur