ஹோம் /தஞ்சாவூர் /

மார்கழி ஸ்பெஷல் : தஞ்சையில் கோலமாவு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது!

மார்கழி ஸ்பெஷல் : தஞ்சையில் கோலமாவு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது!

கோலமாவு விற்பனை

கோலமாவு விற்பனை

Tanjore District News : தஞ்சையில் கோலமாவு விற்பனை எப்படி இருக்கு!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

மார்கழி மாதம் வந்தாலே ஊர்களில் விடியற்காலை ஐப்பபன் கோவில்களில் பாடும் பாடல், காலை நேரத்து சில்லென சுத்தமான காற்று, நம்ம ஊர் பெண்கள் கோலம் போடும் அழகு, கிருஸ்துமஸ், புத்தாண்டுனு உடலை நடுங்க வைத்து மனதை குளிரில் மகிழ வைக்கும் அணைவருக்கும் பிடித்த மாதம் ஆக விளங்கும் வரும் மார்கழி மாதம்.

மார்கழி தொடங்கி தை மாதம் வரை நம்ம ஊர் பெண்களின் கைகளில் கோல மாவு கரை இருந்துட்டே இருப்பது ஒன்னும் ஆச்சரியமான விஷயம் இல்லை..இந்த கோலமாவு விற்பனை தஞ்சையில் சூடு பிடித்து வருகிறது.

தஞ்சையில் பல இடங்களில் கோல மாவு விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் இதற்கென்றே ஹாட்ஸ் ஸ்பாட் ஆக விளங்கும் இடம் தான் தஞ்சை கீழ வாசல் மற்றும் மருத்துவ கல்லூரி, அதன் வகையில் உன் வீட்டு கோலம் பெருசா என் வீட்டு கோலம் பெருசானு போட்டி போட்டு கோலம் போட்டு கலர், வௌயிட் மாவுகளை தீர தீர தீட்ட தீவிரமாக வாங்கி வருகின்றனர் தஞ்சை மக்கள்.

கோலமாவு விற்பனை

இதையும் படிங்க : மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் - தஞ்சாவூரில் போக்குவரத்து மாற்றம்

இதுகுறித்து தஞ்சையில் சாலையோர கோலமாவு விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் கூறுகையில்,  “பொதுமக்கள் வாங்க தொடங்கியிருக்காங்க விலை மாற்றம் பெரிதளவில் இல்லை சென்ற ஆண்டு போல தான் தற்போதும் இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒரு சில பெண்கள் தான் ரொம்ப நேரம் வாங்குவது போலவே பார்த்து விட்டு வீட்டிற்கு போய்டு காசு எடுத்துகிட்டு வரேன் அண்ணேனு செல்லிட்டு காணப்போயிறாங்க என்று நகைச்சுவையாக கூறினார், இருந்தாலும் பல பெண்கள் நேராகவே வந்து பார்த்து பார்த்து வாங்கி செல்கின்றனர். பொங்கலுக்கு வியாபாரத்திற்கு தயாராகி வருகிறோம்” என்று கூறினர்.

செய்தியாளர் : ஆனந்த் - தஞ்சை

First published:

Tags: Local News, Tanjore