ஹோம் /தஞ்சாவூர் /

Thanjavur | மழைக் காலத்தில் சேரும், சகதியுமாக உள்ளது- பல வருடங்களாக சாலை வசதியின்றி தவிக்கும் கீழ வன்னிப்பட்டு கிராம மக்கள்

Thanjavur | மழைக் காலத்தில் சேரும், சகதியுமாக உள்ளது- பல வருடங்களாக சாலை வசதியின்றி தவிக்கும் கீழ வன்னிப்பட்டு கிராம மக்கள்

கீழ

கீழ வன்னிப்பட்டு கிராமம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தனித்தீவு கிராம மக்கள் தவித்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Orathanadu (Mukthambalpuram), India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழ வன்னிப்பட்டு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த 15 குடும்பமும் இதுவரையிலும் கூரை வீட்டில் தான் வசித்து வருகின்றனர். ரேஷன் பொருட்களைத் தவிர அரசின் சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த பதினைந்து குடும்பத்தினருக்கும் சிறிய அளவிலான ஒரேயொரு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி மட்டுமே உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரே நேரத்தில் தண்ணீர் பிடிப்பதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் நகரப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றாலோ, மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றாலும் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்தில் பயணம் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது.

தெருவில் சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மிகவும் சேரும் சகதியாக மாறி பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறிவிடுகிறது.

மேலும் இப்பகுதி மக்கள் வசிக்கும் வீடுகளின் இடமானது, பாதிக்கு பாதி இடம் ஆனது இன்னொருவர் பெயரில் கூட்டு பட்டாவில் இருக்கிறது. இடப் பிரச்சினை இருப்பதால் அரசு வீடு கட்டுவதற்கும் சிக்கலாக இருக்கிறது. பொதுவாக கீழ வன்னிப்பட்டு கிராமத்தைப்  பொறுத்தவரையில் இடுகாட்டுக்கு செல்வதற்கு சாலை வசதிகள் கூட இல்லாமல் சிரமமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது.

ஊராட்சி மன்றத் தலைவரை பொறுத்தவரையில் அரசின் உதவிகளை எதிர்பார்க்காமல் அவரது சொந்த செலவிலேயே தண்ணீர் வசதி, மின்சார வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசிய வன்னிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர், ‘கீழ வன்னிப்பட்டு ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் இடமானது இன்னொருவர் பெயரில் கூட்டு பட்டாவில் இருந்துள்ளது. இது பல ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில் நான் இந்த கிராமத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவராக வந்த பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனது சொந்த செலவில் பட்டா பிரச்சனையை தீர்த்து, பொதுமக்களுக்கு வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன்.

போதுமான நிதிகள் அரசிடமிருந்து கிடைக்காததால் என்னால் இன்னும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. குறிப்பாக சாலை வசதி, வீடு வசதி, வீடுகளுக்கு தனித்தனி தண்ணீர் குழாய் வசதி இதுபோன்ற நிதிகள் அதிகம் தேவைப்படும் வசதிகளுக்கு அரசின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur