தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசாமி திருக்கோவிலில் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக உள்ளது. இந்த கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா நாளை (ஞாயிற்று கிழமை) 27ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 8 ஆம் தேதி வரை 12 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
அதன்படி, நாளை இரவு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கப்பட்டு 28ஆம் தேதி காலை கொடியேற்றமும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலா நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து மறுநாள் 29 தேதி முதல், டிசம்பர் 1 ஆம் தேதி முடிய காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 2 ஆம் தேதி அன்று காலை சுவாமி படிச்சிட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் எழுந்து திருவீதி உலா நடைபெற உள்ளது.
மறுநாள் 3 ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மறுநாள் 6 ஆம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி புறப்பாடும் இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Must Read : தேனியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள்... ஒருமுறையாவது சென்று வாருங்கள்
மறுநாள் ஏழாம் தேதி அன்று சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் இரவு அவரோகணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் செய்ய முன்னேற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி கோவில் கண்காணிப்பாளர்கள் சுதா, பழனிவேல், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam, Local News, Thanjavur