ஹோம் /தஞ்சாவூர் /

கார்த்திகை தீபத் திருநாள்- வண்ண விளக்குகளை வாங்கி கொண்டாடிய தஞ்சை மக்கள்

கார்த்திகை தீபத் திருநாள்- வண்ண விளக்குகளை வாங்கி கொண்டாடிய தஞ்சை மக்கள்

X
கார்த்திகை

கார்த்திகை திருநாள்

Thanjavur | கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மக்கள் ஆர்வத்துடன் அகல் விளக்குகள், மண் விளக்குகளை வாங்கினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்நாள் கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுகின்றது.

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில், கார்த்திகை மாதத்திற்கு சிறப்பைக் கொடுக்கக்கூடியது கார்த்திகை தீபம் தான். தமிழ் மாதங்களில் ஒன்றான கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்நாள் கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுகின்றது.

தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று தமிழ் மக்களால் காலம் காலமாக கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகை என்றால் இது தான்.

அவல் பொறி விற்பனை

இந்த அற்புதமான நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் விளக்குகள் ஏற்றி மனமகிழ்ச்சியோடு கடவுளை வணங்குவார்கள். வீடுகள் மட்டுமின்றி கோவில்களிலும் இந்த நாளில் விளக்குகள் ஏற்றி விமர்சையாக கொண்டாடுவார்கள்.

விளக்குகளின் வகைகள்:

பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு எனப் பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன் சிறு மண் விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவார்கள்.

அகல்விளக்கு விற்பனை

அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருநாள் இன்று கொண்டாப்படுவதை அடுத்து தஞ்சையிலும் பொதுமக்கள் நேற்றிலிருந்தே அகல் விளக்குகள், அவள் பொறிகளை வாங்க தொடங்கிவிட்டார்கள், தஞ்சை கீழ வாசல் பகுதியில் அதிக அளவில் கார்த்திகை தீப பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர், ஒவ்வொரு விளக்கையும் பார்த்து பார்த்து வாங்கிய நிலையில் தஞ்சை கீழ வாசல் பகுதி முழுவதும் கார்த்திகை தீப Vibe -ல் தான் இருந்தது.

First published:

Tags: Local News, Thanjavur