முகப்பு /தஞ்சாவூர் /

தண்ணீரின்றி வறண்டு காணப்படும் கல்லணை கால்வாய் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...! 

தண்ணீரின்றி வறண்டு காணப்படும் கல்லணை கால்வாய் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...! 

X
கல்லனை

கல்லனை கால்வாய் தஞ்சை 

Thanjavur | கல்லணையில் இருந்து விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது கல்லணையில் தண்ணீர் மதகு அடைக்கப்பட்டதால் ஆறுகள் பல இடங்களில் வறண்டும் ஒரு சில இடங்களில் ஆற்றுநீர் தேங்கி கிடக்கிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரி ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துயரப் பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு 2 லட்சம் கன அடி நீர் பாயும் காவிரியின் மீது அணை கட்டுவதற்கு தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். அதன் படி காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்த பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்ச மாக மண்ணுக்குள் சென்றன.

அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாக செய்தனர். இதுவே கல்லணையை கட்ட பயன்படுத்தப்பட்ட அந்த கால தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

அகண்ட காவிரி :-

உலக அளவில் மிகவும் பழமை வாய்ந்த அணையாக கல்லணை திகழ்கிறது. தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள தோகூர் கிராமத்தில் கல்லணை அமைந்துள்ளது. திருச்சியில் அகண்ட கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆறுகளாக பிரிகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.

தண்ணீர் நிறைந்திருந்தது :- 

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் வழக்கமாக ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு (2022) மே மாதம் 24-ந் தேதியே அணை திறக்கப்பட்டது. முன்கூட்டியே அணைதிறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் இலக்கை தாண்டி குறுவை மற்றும் சம்பா சாகுபடி நடைபெற்றது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து கல்லணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கல்லணையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் தொடர்ந்து 9 மாதங்கள் (பிப்ரவரி வரை) தண்ணீருடன் பசுமையாக காட்சி அளித்தது.

இதையும் படிக்க :  பழங்கள் வாங்கினால் புத்தகம் இலவசம்.. தஞ்சாவூர் பழ வியாபாரி புது முயற்சி!

தண்ணீர் நிறுத்தம் :-

மேட்டூர் அணை வழக்கமான நடைமுறைப்படி கடந்த மாதம் (ஜனவரி) மாதம் 28-ந் தேதி மூடப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, புது ஆற்றில் விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப குறைந்த அளவில் தண்ணீர் அவ்வப்போது மாறி மாறி திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் கடந்த 22-ந்தேதி கல்லணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காவிரி, வெண்ணாறு ஆகிய ஆறுகளில் முழுவதுமாக தண்ணீர் விடுவது கடந்த 23-ந் தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் :- 

கடந்த 9 மாதங்களாக ஆறுகள் மிக பசுமையாக காட்சியளித்து. பார்ப்போர் மனதை நெருட வைத்தது. மேலும் தஞ்சைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆற்றில் செல்லும் தண்ணீரை பார்த்து அழகை ரசித்து வந்தனர் தற்போது கல்லணையில் தண்ணீர் மதகு மூலம் அடைக்கப்பட்டதால் ஆறுகள் பல இடங்களில் வறண்டும் ஒரு சில இடங்களில் ஆற்றுநீர் தேங்கி கிடக்கிறது..

இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் மீண்டும் தண்ணீர் வரும் காலத்தை எதிர்பார்த்து உள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் கல்லணை கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

First published:

Tags: Kallanai, Local News, Thanjavur