ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம் - என்னென்ன ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்?

தஞ்சாவூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம் - என்னென்ன ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்?

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Thanjavur District | தஞ்சாவூரில் நாளை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இளைஞர்களுக்கு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் நாளை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இளைஞர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் ரமேஷ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

இதில், தஞ்சையில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்கின்றனர். இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெற்று கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Job Fair, Job vacancies, Local News, Thanjavur