தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சேதுராயான் குடிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று சேதமடைந்து உள்ளதால் அதை நிரந்தரமாக மூடப்பட்டது.
மீதம் உள்ள ஒரே ஒரு கட்டிடத்தில் இரண்டு வகுப்புக்களுக்கான அறையே உள்ள நிலையில் தாற்காலிகமாக காட்போர்டு வைத்து மறைத்துக் மூன்று அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறிய இடத்தில் தான் குழந்தைகள் தற்போது வரையிலும் படித்து வருகின்றனர். மேலும் ஆசிரியர்களுக்கான அறையும் அதில் தான் இருக்கிறது.
பள்ளி வளர்ச்சி குழுவின் மூலம் இந்த கிராமத்தை சேர்ந்த வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் அளித்த நன்கொடையின் மூலம் LKG, UKG வகுப்பை தொடங்குவதற்கான சிறிய அளவிலான ஷீட் அமைத்த கட்டிடம் இந்த பள்ளி வளாகத்திற்குள்ளேயே அமைக்கப்பட்டது.
போதிய வகுப்பறை வசதி இல்லாததால் பள்ளி வளர்ச்சி குழுவின் மூலம் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் 4 வகுப்பும் நடந்தது வருகிறது.
மேலும் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் குழந்தைகள் நல மைய கட்டிடமும் சேதமடைந்து உள்ளதால் அந்த குழந்தைக்களும் இந்த ஷீட் அமைத்த கட்டிடத்தில் தான் படித்து வருகின்றனர்.
இவ்வளவு அவலம் இருக்கும் நிலையில்
பள்ளி வளாகத்தில் உள்ள கிராமத்திற்கு பொதுவான தண்ணீர் தொட்டியின் பில்லர்களும் சேதமடைந்து மேல் தளத்தில் உள்ள சிமெண்ட் கான்கிரீட்டும் பொறிந்து தண்ணீரில் கலக்கிறது. இது ஆசிரியர் குழந்தைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கிராம மக்களுக்கும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க : திருக்கார்த்திகை தீபத்திருவிழா... சுவாமிமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது
இதுகுறித்து பள்ளி வளர்ச்சி குழு மற்றும் கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், “எத்தனையோ முறை கவுன்சிலர் எம்.எல்.யே என அணைவரிடமும் மனு அளித்துள்ளோம். கட்டிடத்தை இடிப்பதற்கான அறிவிப்பு வந்ததே தவிர புது கட்டிடம் அமைக்க யாரும் இது வரை கண்டுகொள்ளவில்லை.
எனவே பள்ளிக்கும் குழந்தைகள் நல மையத்திற்கும் புதிய கட்டிடம் அமைக்க வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியையும் இடித்து புத தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore