Home /thanjavur /

மாதம் ரூ.1000 உதவி தொகையுடன் தஞ்சை ஐடிஐகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

மாதம் ரூ.1000 உதவி தொகையுடன் தஞ்சை ஐடிஐகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தஞ்சை ஐடிஐ மாணவர்கள்

தஞ்சை ஐடிஐ மாணவர்கள்

TANJAVUR : தஞ்சை  அரசு ஐடிஐகளில் ( அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் ) மாதம் ரூ.1000  உதவித் தொகையுடன் மாணவர் சேர்கை அறிவிப்பை கலெக்டர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சை அரசு ஐடிஐகளில் (அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் ) மாதம் ரூ.1000 உதவித் தொகையுடன் மாணவர் சேர்கை அறிவிப்பை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  வெளியிட்டுள்ளார்.

அரசு மற்றும் தனியார் நிலையங்களில் உள்ள ஐடிஐக்களில் சேர மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி மற்றும் பல்வேறு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. அந்தவகையில் ஐடிஐகளில் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்திக்குறிப்பில், தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-ம் ஆண்டு சேர்க்கைக்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு முடிந்துள்ளது.

இதில் ஓராண்டு தொழிற்பிரிவுகளான வெல்டர், தொழிற்சாலை வர்ணம் பூசுபவர், போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. மகளிர் பிரிவுகளான மெக்கானிக், மெக்கட்ரானிக்ஸ் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன.

இதையும் படிங்க : தஞ்சாவூர் போறீங்களா... இந்த நவீன உணவு அருங்காட்சியகத்தை மிஸ் பண்ணாம பாருங்க... 

எனவே இதில் சேர விருப்பம் உள்ள 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை, விலையில்லா சைக்கிள், சீருடைகள், காலணி, வரைபடக்கருவி, நோட்டு புத்தகம் போன்றவை வழங்கப்படும்.

இதில் பெண்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு வயது வரம்பில்லை. பயிற்சிகளில் சேர விரும்புவோா் மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்று, சாதிச்சான்று, ஆதாா் அட்டை மற்றும் மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தொழிற்பயிற்சி மையங்களுக்கு நேரில் சென்று சோ்ந்துகொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தவிர ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

 
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி