தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை ஒன்றியம், கோட்டூர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவரது தோட்டத்தில் சுமார் 1000 மரக்கன்றுகள் மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா, வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு கிராமத்தில் செந்தமிழ் செல்வன் என்பவரின் பண்ணையில் சுமார் 600 மரக்கன்றுகள் நம்மாழ்வாரின் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு துடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நம்மாழ்வாரை போற்றும் வகையில் அவரது நினைவு நாளான டிசம்பர் 30 அன்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் 2 லட்சம் டிம்பர் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
ஈஷாவின் ஈடுபாடுகளை கடைபிடித்த நம்மாழ்வார் :
தமிழகத்தில் பாரம்பரிய விவசாய முறைகளை மீட்டெடுத்து மண் வளம் காப்பதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயல்புரிந்தவர் நம்மாழ்வார். அவர் நம்மோடு வாழ்ந்த காலத்தில் ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்புரிந்தவர்.
மண்ணை வளமாக வைத்து கொள்ள நாட்டு மாடுகளும், மரங்களும் அவசியம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நம்மாழ்வார் அவர்கள் இயற்கை தொடர்பான பணிகளில் மட்டுமல்லாது ஈஷாவின் யோகப் பயிற்சிகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஈஷாவில் கற்றுக்கொண்ட யோகப் பயிற்சிகளை தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர்.
நம்மாழ்வார் வழியில் ஈஷா :
நம்மாழ்வாரின் பாதையில் இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதில் ஈஷா மண் காப்போம் இயக்கமும், விவசாய நிலங்களில் மரவளர்ப்பு பணியை முன்னெடுப்பதில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கமும் பெரியளவில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மேலும் விவசாயிகளுக்கு தேவையான டிம்பர் மரக்கன்றுகள் மலிவான விலையில் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 40 ஈஷா நாற்று பண்ணைகளில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு மரக்கன்று 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
நம்மாழ்வார் மீது பற்று கொண்ட சத்குரு :
சத்குரு நம்மாழ்வாரை பற்றி கூறும்போது, “பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளால் மண்ணை வளப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்த ஞானம் மிகுந்த ஒரு எளிய மனிதர். நாடோடியான துறவியாகவும் நெறிசாரா கதைகள் சொல்பராகவும் போற்றப்பட்டவர். ஈஷா விவசாய இயக்கத்தின் தொடக்க காலங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்” என பகிர்ந்திருக்கிறார்.
காவிரி கூக்குரலின் 20 ஆண்டுகால ஈடுபாடு :
நம்மாழ்வாரின் நினைவு நாளான டிசம்பர் 30 அன்று ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் 2 லட்சம் மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது. சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஒரு கோடி மரங்கள் நட இலக்கு :
விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயம் செய்வதன் மூலம் மழை தருவிக்க மரங்கள், மண்வள மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற நன்மைகள் கிடைப்பது மட்டுமல்லாமல், ஆற்று வடிநிலப் பகுதிகளில் தொடர்ந்து மரங்கள் நடுவதன் மூலம் நதிகளின் நீர் பிடிப்பு அதிகரித்து நதிகள் மீட்டுறுவாக்கம் பெறும்.
முக்கியமாக காவிரி ஆற்றின் வடிநில பகுதிகளில் அடுத்துவரும் 12 ஆண்டுகளில் விவசாய நிலங்களில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் 4 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 76 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.
வருமானம் தரும் மரம் சார்ந்த விவசாயம் :
மரவிவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈஷாவின் மரம் சார்ந்த விவசாயக் குழுவினர் பல்வேறு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த பயிற்சிகளில் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம்.
மேலும் குறைந்த விலையில் மரக்கன்றுகளை பெறவும், அவரவர் நிலத்திற்கு ஏற்ற மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுத்து நடுவதற்கான ஆலோசனையைப் பெறவும் காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
செய்தியாளர் : ஆனந்த் - தஞ்சாவூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore