முகப்பு /தஞ்சாவூர் /

ஹெல்மெட் போடுர வரைக்கும் ஃபைன் தான்.. தஞ்சையில் வாகன ஓட்டிகளுக்கு பாரபட்சமின்றி அபராதம்.. 

ஹெல்மெட் போடுர வரைக்கும் ஃபைன் தான்.. தஞ்சையில் வாகன ஓட்டிகளுக்கு பாரபட்சமின்றி அபராதம்.. 

X
ஹெல்மெட்

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போலீஸர் அபராதம் 

Thanjavur District Police : தஞ்சையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த சில மாதத்திற்கு முன்பு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினர் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதங்களை தொடர்ந்து விதித்து வருகின்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி தஞ்சை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சோழன் சிலை அருகே போலீசார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தி டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ் சரியான முறையில் உள்ளதா? மோட்டார் வாகன சட்டப்படி நம்பர் பிளேட் வடிவமைக்கப்பட்டுள்ளதா ? ஹெல்மெட் அணிந்துள்ளார்களா? போன்றவை குறித்து சோதனை செய்தனர்.

தஞ்சையில் வாகன ஓட்டிகளுக்கு பாரபட்சமின்றி அபராதம்

இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000-ம், லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு ரூ.5000-ம் அதனை புதுபிக்காதவர்களுக்கும் இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் சென்றால் 1000 அபராதமாக விதிக்கப்பட்டது‌‌ ..மேலும்மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் படி நம்பர் பிளேட் வடிவமைக்காதவர்களுக்கு அதாவது நம்பர் பிளேட்டில் நம்பரை தவிர வாசகம் எழுதி இருத்தல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அறிவுறுத்தினர்.  நம்பர் இல்லாமல் வெறும் வாசகம் மட்டும் எழுதி இருத்தல், வாகனத்தின் ஒரு பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.1000 மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    First published:

    Tags: Local News, Thanjavur