Home /thanjavur /

தஞ்சையில் இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்.. என்ன ஸ்பெஷல்?

தஞ்சையில் இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்.. என்ன ஸ்பெஷல்?

தஞ்சையில்

தஞ்சையில் உணவு அருங்காட்சியகம்..

Thanjavur Food Museum | தஞ்சாவூர் - புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள நிர்மலா நகரில் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
இந்திய உணவுக் கழகத்தின் சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில், அதுவும் தஞ்சாவூரில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நெல் நாற்று விடுவது தொடங்கி அரிசியாக கிடைப்பது வரையிலான காட்சிகளை மெழுகு மற்றும் மரப் பொருள்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருப்பது பலரையும் கவர்ந்துள்ளது.

தஞ்சாவூர் - புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள நிர்மலா நகரில் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 

13,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உணவு தேவைக்காக வேட்டையாடியது தொடங்கி இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, எகிப்து போன்ற பல நாடுகளில் விவசாயிகள் உணவு தயாரிப்பதற்கான பொருள்களை விளைவிக்கப் பயன்படுத்தப்பட்ட உழவு கலப்பைகள், தானியங்களைப் பாதுக்காக்க அமைக்கப்பட்ட களஞ்சியங்கள், உணவைத் தாக்கும் பூச்சி வகைகள் உள்ளிட்ட பலவற்றை மெழுகு மற்றும் மரப்பொருள்களின் மூலம் டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியத்தை வார நாட்களில் திங்கள் முதல் சனி வரை காலை 10 மணி முதல் மாலை 5 வரை பார்கலாம்.

தஞ்சையில் உணவு அருங்காட்சியகம்..


13 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதன், தனக்கான உணவை எப்படி சேகரித்தான்? காலப்போக்கில் வேளாண்மை எப்பொழுது உருவானது? என்கிற 8 நிமிடம் காணொலி  ப்ரொஜெக்டர் மூலமாக காண்பிக்கப்படுகிறது. உலக நாடுகளில் மனிதர்கள் உணவை சேகரித்த முறை, மற்றும் உணவு பொருட்களை தாக்கும் பூச்சிகள் ஆகியவற்றை தொடு திரை மூலமாக நாம் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் உணவு அருங்காட்சியகம்..


மேலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் அடையாளப்படுத்தும் இரண்டு உணவுகளை அந்த மாநிலத்தை தொடு திரை மூலமாக தொடும் போது அந்த உணவையும் அதை செய்யும் முறைகளையும் திரையில் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் உணவு அருங்காட்சியகம்..


நெற்பயிர்கள் நடவு செய்யும் முறைகள் முதல் நெல் கிடங்கில் சென்று மக்களிடம் சேறும் வரை..உள்ள நேரடி காட்சிகளை 3D தொழில்நுட்பத்திறன்‌ மூலம் பார்பதால் களத்தில் நின்று பார்ப்பது போல் உணர்வை உணரமுடியும் போல் அமைக்கப்பட்டுள்ளது, மற்றும் மாணவர்களுக்காக இந்த வேளாண்மை பற்றிய கேள்விகளை வினாடி வினா மூலம் திரையில் பார்த்து பொத்தான்கள் மூலம் பதிலளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது போன்ற வேளாண்மை பற்றிய தகவல்களையும் டிஜிட்டல் முறையில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த விதமான கண்டனமும் வசூலிக்கப்படவில்லை.

Thanjavur Food Museum
தஞ்சையில் உணவு அருங்காட்சியகம்..


மேலும் இது குறித்து உணவு அருங்காட்சியக அலுவலக மேலாளர் கூறுகையில்:  “இந்த உணவு அருங்காட்சியகம் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்ததாகவும், முழுவதும் டிஜிட்டல் முறையில் மாணவர்கள் உட்பட அனைவரும் வந்து பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அணைவரும் பார்க்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Tanjore, Thanjavur

அடுத்த செய்தி