Home /thanjavur /

தஞ்சாவூர் பகுதி விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு 

தஞ்சாவூர் பகுதி விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Tanjore | தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மாதாந்திர, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அதனை தீர்த்து வைக்கும் வகையில் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

    அதன்படி, அந்தந்த பகுதி விவசாயிகள் இதுபோன்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தும், நேரடியாக முறையிட்டும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

    இந்த கூட்டதில் துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளின் குறைகளை தீர்த்து வைத்து வருகின்றனர்.

    Also Read : ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய்ப் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

    அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி) விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    இந்த கூட்டத்தில், பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Tanjore

    அடுத்த செய்தி