ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்

மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி

Thanjavur District | தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை வழங்குவது தொடர்பாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முக்கிய செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தஞ்சை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கு எண் 10 ல் நாளை (வியாழக்கிழமை ) காலை 11 மணிக்கு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக நேரடியாக அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் உதவிகள் வாரியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Must Read :விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் குற்றால அருவி... அது எங்கிருக்கிறது, அங்கே எப்படி செல்வது?

எனவே, இந்த வாய்ப்பினை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், இருப்பிடத்திற்கான ஆதாரமாக குடும்ப அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 1 மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நாளை காலை 10 மணிக்குள் நேரில் வந்து மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04362-236791- ல் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Physically challenged, Thanjavur