முகப்பு /தஞ்சாவூர் /

பொதுத்தேர்வில் கணிதப் பாடத்தில் எளிதாக மதிப்பெண் பெறுவது எப்படி? தஞ்சை ஆசிரியை அறிவுரை!

பொதுத்தேர்வில் கணிதப் பாடத்தில் எளிதாக மதிப்பெண் பெறுவது எப்படி? தஞ்சை ஆசிரியை அறிவுரை!

X
கணித

கணித ஆசிரியை

Thanjavur Teacher Advice | பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணக்கு பாடத்தில் எளிதாக மதிப்பெண் பெறுவது எப்படி என்பது குறித்து தஞ்சாவூர் ஆசிரியை அறிவுரை கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Thanjavur, India

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில், கணக்குபாடத்தில் மாணவர்கள் படிக்க வேண்டிய முக்கியமான கேள்வி மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பதற்கான வழிமுறைகளும், தேர்ச்சி மட்டுமே பெற்றால் போதும் என நினைக்கும் மாணவர்களுக்கும் தஞ்சை வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் ஆர்த்தி மாணவர்களுக்கு பல்வேறுஅறிவுரைகளை கூறியுள்ளார்.

அதில், பத்தாம் வகுப்பில் மொத்தம் 8 Chapters (அத்தியாயம்)உள்ளன.இதில் முதல் 5 அத்தியாயத்தைதெளிவாக படித்தாலே 100 மதிப்பெண் எடுப்பது மிகவும் எளிது. முதல் (Chapter) அத்தியாயம் (Algebra) இயற்கணிதத்தில் 2 மதிப்பெண் கேள்விகள் 2 கேட்கப்படுகிறது. ஒரு மதிப்பெண் கேள்வி, 3 கேட்கப்படுகிறது, ஐந்து மதிப்பெண் வினா மூன்று கேட்கப்படுகிறது.இதில் கவனம் செலுத்தினாலேமொத்தம் 22 மதிப்பெண் பெற்றுவிடலாம்.

ஆயத்தொலை வடிவியல் (Coordinate geometry)பாடத்தில் 18 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அளவியல் பாடத்தில் 16 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகிறன. எண்களும் தொடர்வரிசைகளும்(Numbes and sequence) பாடத்தில் 16 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. வரைபடம்( geometry) 16 மதிப்பெண் ஒதுக்கப்படுகிறது.

இந்த 5 பாடத்தை மட்டும் தரவாக படித்தாலே 70 மதிப்பெண்கள் எளிதாக எடுக்க முடியும்(Relations and Function) கணிதம் உறவுகளும் சார்புகளும், பாடத்தில் 9 மதிப்பெண் ஒதுக்கப்படுகிறது, முக்கோணவியல் (Trigonometry)மற்றும்புள்ளியியல் (statistics) பாடத்தில் 8 மதிப்பெண் ஒதுக்கப்படுகிறது. முதல் ஐந்து பாடத்தையும் இந்த மூன்று பாடத்தையும் நன்கு தரவாக படித்தாலே எளிதாக 100 மதிப்பெண்கள் எடுக்க முடியும்

கட்டாய கேள்விகள் (Compulsory question) :-

1. இயற்கணிதம் ( Algebra)- 5 மதிப்பெண் கேள்வி ( கட்டாயம் கேட்கப்படுகிறது)

2. அளவியல் (Mensuration)2 மதிப்பெண் கேள்வி ( கட்டாயம் கேட்கப்படுகிறது)

மாறுபட்ட Blue print:

Blue printதற்போது இருக்கும் கேள்விகள் அமைப்பு மாறுபட்டதாகவே இருக்கிறது.அதனால் முக்கோணவியல் பாடத்திலும் அளவியல் பாடத்திலும் உள்ள இரண்டு மதிப்பெண் கேள்விகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இது போல திட்டமிட்டு படித்தாலே கணித பாடத்தில் எளிதாக அதிக மதிப்பெண் எடுக்க முடியும்.

தேர்ச்சி பெற்றால் போதும் என நினைக்கும் மாணவர்கள் எளிதாக 37 மதிப்பெண்ணை எடுக்க முடியும். அதில் ஒரு மதிப்பெண் வினா மொத்தம் 14 கேட்கப்படுகிறது அதில் 12 வினா புத்தகத்தில் உள்ளதையே கேட்கப்படுகிறது.அதனால் அதில் நன்கு கவனம் செலுத்த வேண்டும்அடுத்தது. வரைபடம் முக்கோணம் வரைதல்(Craphs, geometry) பாடத்தில் பதினாறு மதிப்பெண் கையில் இருக்கிறது, சிலமுறை தொடுகோடு கேட்கலாம்.வடிவொத்த முக்கோணங்கள் வரைதல்( similar triangle) கேட்கலாம் எனவே இதை மாற்றி மாற்றி இரண்டையும் தரவாக படிக்க வேண்டும்.

இதை செய்தாலே முக்கோணம் வரைதல் எட்டு மதிப்பெண் எடுத்து விடலாம், அடுத்தது, வரைபடத்தில் நன்கு கவனம் செலுத்தினாலே 8 மதிப்பெண் எடுத்து விடலாம்.‌ இதைத் தவிர முதல் பாடத்தில், உறவுகளும் சார்புகளும்( function relations) பாடத்தில் அதிக கவனம் இருந்தால் 9 மதிப்பெண் பெறலாம், தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் இந்த ஒரு வழிமுறையை பின்பற்றினால் நிச்சயம் தேர்ச்சி பெற முடியும்.

எனவே மாணவர்கள் எந்த பதற்றமும் இன்றி தேர்வை எளிதாக கையாண்டு அதிக மதிப்பெண்களை எடுக்க வாழ்த்துக்கள் என ஆசிரியை ஆர்த்தி கூறினார்.

First published:

Tags: 10th Exam, Local News, Teacher, Thanjavur