ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை மாவட்ட விவசாயிகள் தென்னையில் காண்டா மிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? 

தஞ்சை மாவட்ட விவசாயிகள் தென்னையில் காண்டா மிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? 

தஞ்சை

தஞ்சை

How To Control Kanda Beetle Attack In Coconut? | தென்னனையில் காண்டமிருக வண்டு தாக்குதல்லை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து வேளாண்மை அதிகாரிகள் சார்பில் வழிகள் வழங்கப்பட்டுள்ளது. இதை தவறாமல் செய்தால் தடுக்க முடியும் என்று வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தென்னையில் காண்டா மிருக வண்டு தாக்குதலை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து வேளாண்மை அதிகாரிகள் சார்பில் வழிகள் வழங்கப்பட்டுள்ளது. இதை தவறாமல் செய்தால் தடுக்க முடியும் என்று வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர்.

தென்னை மரங்களுக்கு பல்வேறு நோய் தாக்குதல்கள் வருகின்றன. இந்நிலையில், பொதுவாக வண்டு இனங்கள் தாக்குவதால் பெரிய அளவில் தென்னை மரங்கள் அடியோடு அழிந்தும் விடுகிறது.

இதையும் படிங்க ; கொப்பரை கொள்முதல் காலம் நீட்டிப்பு - தஞ்சை கலெக்டர் தகவல்

இந்நிலையில், தென்னையை தாக்கும் காண்டா மிருக வண்டு அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) சாந்தி தெரிவித்துள்ளார்.

கற்பக விருட்சமாம் தென்னை சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 7000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதன் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அதிக அளவில் காணப்படுகிறது. காண்டா மிருக வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாக குருத்துப் பாகத்தில் துளையிட்டு மரத்தில் உள்ளே சென்று மொட்டு பகுதியை மென்று விடுகிறது.

தாக்கப்பட்ட பாகம் போக எஞ்சிய குறுத்து விரியும் போது தென்னை மட்டை முக்கோணம் போல, சீராக கத்தரியால் வெட்டியது போல் இருக்கும். காண்டாமிருக வண்டு தாக்குதலால் 10% முதல் 15 சதவீதம் வரை மகசூல் பாதிக்கும். தாக்கப்பட்ட மடிந்து போன மரங்களை தோப்புகளில் இருந்து அப்புறப்படுத்தி அழித்து விட வேண்டும்.

குப்பை மற்றும் எரு குழிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எரு குழிகளில் உள்ள முட்டை, புழுக்கள், கூட்டுப்புழுக்களை பொறுக்கி அழித்து விட வேண்டும். மெட்டாரை சியம், அனிசோபிலே, பச்சைமஸ்கார்டைன் பூஞ்சை 250 மில்லியுடன் 750 மில்லி நீர் சேர்த்து எரு குழிகளில் தெளிப்பதன் மூலம் வண்டுகள் மற்றும் இளம் புழுக்களை அழிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், மற்ற வண்டு இனங்களிலும் தாக்குதல்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று மற்ற வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். தற்போது காண்டாமிருக வண்டு இன தாக்குதல்களை கட்டுப்பத்தினாலே போதும் என்று விவசாயிகளும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore