ஹோம் /தஞ்சாவூர் /

வாரிசு ட்ரைலர் எப்படி இருக்கு? தஞ்சையில் தல தளபதி ரசிகர்கள் கூறும் கருத்து என்ன?

வாரிசு ட்ரைலர் எப்படி இருக்கு? தஞ்சையில் தல தளபதி ரசிகர்கள் கூறும் கருத்து என்ன?

X
வாரிசு

வாரிசு ட்ரைலர் குறித்து ரசிகர்கள் கருத்து

Thanjavur vijay fans reaction | வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியான நிலையில், தஞ்சாவூரில் விஜய், அஜித் ரசிகர்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ள படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

அண்மையில் வாரிசு படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இசை வெளியீட்டு விழாவும் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ட்ரைலர் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியான நிலையில் இன்று மாலை 5 மணிக்கு டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

ட்ரெய்லர் வெளியான பத்து நிமிடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்த நிலையில் வெளியான 4 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது.. விஜய் ரசிகர்கள் ட்ரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.. ட்ரெய்லரில் பல மாசான வசனங்கள் இடம் பெற்றுள்ளது. ட்ரைலரில் இறுதியில் ஆட்ட நாயகன் என்ற டயலாக் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் ட்ரைலரை பார்த்த தஞ்சையில் இளைஞர்களிடம் கேட்டறிந்தோம் அவர்கள் கூறுகையில்\" படம் ஒரு ஃபேமிலி என்டர்டைன்மெண்ட் படம் போல் அமைந்துள்ளது போல் இருக்கிறது இதைத்தான் படக்குழுவினரும் பல முறை சொன்னார்கள் அதே போல் தான் அமைந்திருக்கிறது. டிரைலரை பார்த்து எதுவும் முடிவு செய்து விடக்கூடாது. திரையில் பார்கலாம் எனவும் கூறியுள்ளனர்கள். ட்ரைலரை பார்த்த அஜித் ரசிகர்கள் பலர் துணிவு படம் பீஸ்ட் படத்தின் காப்பி என்று பல விமர்சனங்கள் வந்தது ஆனால் இந்த படம் நாடகம் போல் உள்ளது ஒன்றும் புதிதாக இல்லை ஏற்கனவே எடுத்தது போன்ற பழைய கதை போல் உள்ளதாக தான் தெரிகிறது என்றும் கூறினார்.

எது எப்படியோ இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது திரைக்கதையை பார்த்து முடிவு செய்யலாம் எனவும் சிலர் கூறினார்கள்.

First published:

Tags: Ajith fans, Local News, Thanjavur, Varisu, Vijay fans