முகப்பு /தஞ்சாவூர் /

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படம் குறித்து குடும்பத் தலைவிகளின் கருத்து என்ன?

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படம் குறித்து குடும்பத் தலைவிகளின் கருத்து என்ன?

X
கண்ணை

கண்ணை நம்பாதே 

kannai nambathey review | உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே‘ படம் தஞ்சை ரசிகர்களை கவர்ந்ததா? குடும்பத்தலைவிகள் என்ன சொல்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சரான பிறகு அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளதால், சினிமாவில் இனி நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளார். அவர் நடித்து வெளிவராமல் இருந்த படங்கள் அனைத்தும் தற்போது ரிலீஸ் ஆகி வருகின்றன.

அந்த வகையில் மாறன் இயக்கத்தில் உதயநிதி, பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகுகிறார். அன்று இரவே பூமிகா ஓட்டி வரும் கார் விபத்துக்குள்ளாகிறது. அதை பார்க்கும் உதயநிதி, பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு விட்டு அவரின் காரை எடுத்து வருகிறார்.

அத்துடன் மறுநாள் காலை அந்தக் காரை பூமிகாவிடம் கொண்டு சேர்க்க நினைக்கிறார். ஆனால் அந்த காரில் மரணமடைந்த நிலையில் அவர் உடல் கிடக்கிறது. இதற்கு பின் என்ன நடக்கிறது? அந்த மரணத்திற்கு பின் இருக்கும் மர்மங்கள் என்ன? அந்த சம்பவத்தில் உதயநிதி எப்படி சிக்கினார்? அதற்கு பின் இருக்கும் பெரும் சதி திட்டம் என்ன? என்பதே கண்ணை நம்பாதே படம்.

தஞ்சையில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் டுவிஸ்ட் கலந்த இன்ட்ரஸ்டிங்கான கதையாக உள்ளது. குடும்பத்தினருடன் வந்து பார்த்ததில் மகிழ்ச்சி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பாசிட்டிவ் கமெண்ட் கொடுத்துள்ளனர்.

இவர்களுள் தஞ்சையை சேர்ந்த குடும்பத் தலைவிகளும் பாசிட்டிவான கமெண்டை மகிழ்ச்சியாக கூறினர். அவர்களுள் ஒருவர், ‘மனசார சொல்ரேன், உதயநிதி படம் நல்லா இருக்கு’ என்று புகழ்ந்து பேசினார்.

First published:

Tags: Udhayanidhi Stalin