தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள மூலை அனுமார்கோயில் மிகவும் பழமையான கோயிலாக இருக்கும் நிலையில் 300 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னர் மனதை கவர்ந்த கோயிலாகவும் இருந்துள்ளது. தஞ்சையில் பக்தர்கள் அதிகம் வரும் கோயில்களின் வரிசையில் இந்த கோவிலும் உள்ளது. இந்த கோவில் பற்றிய தல வரலாறு சிறப்பு அனைத்தையும் பார்க்கலாமா..
கோயில் தல வரலாறு:
மராட்டிய மன்னரான பிரதாபசிம்மன் என்ற மன்னன் பிரதாப வீர ஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை எதிரிப்படையினர் நாட்டை முற்றுகையிட்டபோது பிரதாப் சிம்மராஜா மூலை அனுமாரை வேண்டினார்.
ஆஞ்சநேயர் வானர சேனைகளை உருவாக்கி எதிரிநாட்டு படையை ஓட ஓட விரட்டினார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் பிரதாபசிம்மன் ஆஞ்சநேயருடன் ஐக்கியமானதாக கர்ண பரம்பரை ஈதை வாயிலாக அறிய முடிகிறது. எனவே தான் இவருக்கு பிரதாபவீர ஆஞ்சநேயர் என்ற பெயர் ஏற்பட்டது.
மேலும் படிக்க : மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு இத்தனை பட்டப் பெயர்களா- சரித்திர நாயகன் பெற்ற பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இவருக்கு மூலை அனுமார் என்று பெயர் வர ஒரு காரணம் உண்டு. தஞ்சாவூரில் நான்கு ராஜ வீதிகள் உள்ளது. மூலை அனுமார் வடமேற்கு மூலையின் கிழக்கு நோக்கி தளக்கு கோயில் எழுப்பும்படி தஞ்சை மன்னனுக்கு ஆணையிட்டார். எனவே பக்தர்களால் முலை அனுமார் என பெயர் சூட்டப்பட்டு அதுவே நிலைத்து விட்டது.
கோயில் சிறப்புகள்:
முகலாய படையெடுப்பின்போது காஞ்சிபுரத்தில் இருந்த பங்காரு காமாட்சி அம்மன் சிலை தஞ்சைக்கு எடுத்து வரப்பட்டது. சிலைக்கு அடைக்கலம் தர அனைவரும் பயந்தபோது இந்த தலத்திலேயே சிலையை மறைத்து லைத்திருந்தனர்.
ராம பக்தர்களின் கனவில் தோன்றிய அனுமான் பங்காரு காமாட்சி அம்மனுக்கு தன் கோயில் அருகிலேயே கோயில் அமைக்கும்படி ஆணையிட்டார். ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போது தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த சிற்ப புகழ் பெற்றது.
பக்தர்களின் நம்பிக்கை :
குழந்தை பேறுக்காக வேண்டுபவர்களும், புதுமண தம்பதிகளும் இவர்களை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை. பாம்பு, நிலவை கவ்வி பிடிக்க வருவது போன்ற சிற்பமும் இங்கு உள்ளது.
இதை கண்டவர்களுக்கு ராகு, கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்குள்ள வேப்பமரத்தை அம்பாளாகக் கருதுகின்றனர். அம்பாள் ராம நாமத்தை வேப்பரை வடிபத்தில் நின்று கேட்பதாக நம்பிக்கை.
தோஷ வழிபாடு:
படிப்பில் தடை திருமணத்தடை வியாதிகள், தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமார் மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு. அன்று 18 அகல் விளக்குகள் ஏற்றி 18 முறை மவுளமாக கோயிலை வலம் வருவார்கள். 18 நாட்கள் முதல் 18 ஆண்டுகள் வரை இந்த பிரார்த்தனையை செய்யலாம். மார்கழி மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் 18 ராமநாமம் எழுதுகின்றனர்.
ஒரு முறை வளம் வரும்போது 56 முறை ராம ஈன்ற மந்திரத்தை எழுதினால், 15 முறை வலம் வந்தால் 1008 ராம் ஜெபம் நிறைவுபெற்று விடும். இக்கோயில் மூவநட்சத்திரத்தன்று வழிபாடு செய்ய விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.
நேர்த்திக்கடன்: வேண்டுதல்கள் நிறைவேற 18 அகல் விளக்குகள் ஏற்றியும், 1008 ராம ஜெபம் எழுதியும் வழிபடுகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
திருவிழா : ராம நவமி. அனுமன் ஜெயந்தி
கோயில் திறக்கும் நேரம் :காலை மணி 6 முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.20 மணி வரை திறந்திருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur