முகப்பு /தஞ்சாவூர் /

எமதர்மனை நீதிபதியாக கருதி வணங்கும் பக்தர்கள்.. தஞ்சாவூரில் எமதர்மராஜா கோவில் எங்கு உள்ளது தெரியுமா?

எமதர்மனை நீதிபதியாக கருதி வணங்கும் பக்தர்கள்.. தஞ்சாவூரில் எமதர்மராஜா கோவில் எங்கு உள்ளது தெரியுமா?

எமதர்மராஜா கோவில்

எமதர்மராஜா கோவில்

Emadarmaraja Temple | தஞ்சாவூர் மாவட்டத்தில் எமதர்மனுக்கு என தனி கோவில் உள்ளது. இப்பகுதி மக்கள் அவரை இஷ்ட தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

பொதுவாக கோவில்களில் எமதர்மராஜாவுக்கு என்று சன்னதிகள் வைப்பதில்லை. சில கோவிலில் மட்டும் இருக்கு. அதுவும் சிறியதாக வைக்கப்படுகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலம் கிராமத்தில் எமதர்மராஜாவுக்கு என்றே தனி கோவில் இருக்கிறது. இந்த கோவில் 2000 ஆண்டு பழமையானது என்று சொல்லப்படுகிறது. இப்பகுதி மக்கள் இஷ்ட தெய்வமாக எமதர்மரை வணங்கி வருகின்றனர்.

தல வரலாறு :

ஒருமுறை பிரகதாம்பாள் என்ற திருநாமத்துடன் அவதரித்த பார்வதிதேவியை சிறு குழந்தையாக எமதர்மனிடம் வழங்கினார், சிவபெருமான். அந்த குழந்தையை பூமிக்கு அழைத்துச் சென்று, பெரியவளாக வளர்ந்ததும் சிவபெருமானுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது ஈசனின் கட்டளையாகும். அதன்படி பூமிக்கு வந்து சேர்ந்தார் எமதர்மன். வருடங்கள் பல கடந்தது. பிரகதாம்பாள், பருவ வயதை எட்டியதும், அவளை சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் முடிவு செய்தனர்.

ஆனால் அந்த நேரத்தில் சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இதனால், மன்மதனை அழைத்து வந்து, சிவபெருமானின் தியானத்தை கலைக்கும்படி செய்தனர். கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான், நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை அழித்தார். மன்மதன் இறந்துபோனால் உலக உயிர்கள் காதல் வயப்பட்டு இயங்காமல் போய்விடும் என்பதால், மன்மதனை உயிர்ப்பிக்கும்படி ரதிதேவி வேண்டினாள்.

இதையும் படிங்க : ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

ஆனால் ஈசனோ, “இறந்தவர்கள் உயிர் பெறுவதில்லை. இருப்பினும் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்காக நடத்தப்படும் திருவிழாவின் போது, உன்னுடைய கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான்” என்று கூறியருளினார். சிவபெருமானின் ஆனைப்படி, மன்மதனின் உயிரைப் பறிப்பதற்காக எமதர்மராஜன் வந்து இறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம் என்று இந்த ஆலயத்தின் தல புராணக் கதை சொல்கிறது.

சாதாரண மண் கோவிலாக இருந்த இந்த கோவில், பலதரப்பட்ட மக்களின் உதவியோடு ரூ.3 கோடி செலவில் கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. சில கோவில்களில் எமதர்மருக்கென்று தனிச் சன்னதிகள் மட்டுமே இருக்கும். ஆனால், எமனுக்காக மட்டுமே எனத் தனிக் கோயிலே இருப்பது இங்கு மட்டுமே.

கோவிலின் சிறப்புகள் :

இந்த ஆலயத்தில் 6 அடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன் பாசக்கயிறு மற்றும் ஓலைச்சுவடி, கதையை தாங்கியபடி கம்பீரமாக எமதர்மராஜன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தினமும் எமகண்ட நேரத்தில், எமதர்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. எமதர்மனை இங்கு வழிபடும் பக்தர்கள், நேருக்கு நேராக நின்று வணங்குவதில்லை என்கிறார்கள். பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ப எழுதப்பட்ட கணக்குப்படி, தன்னுடைய நீதியை வழங்கும் இத்தல எமதர்மனையும் ஒரு நீதிபதியாகவே கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இதையும் படிங்க : ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

இவரை வணங்கினால், நமக்கான நீதி உடனடியாக கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். இந்தப் பகுதியில் நடைபெறும் திருமணம், வளைகாப்பு போன்ற எந்த மங்கல நிகழ்வாக இருந்தாலும், அதற்கான பத்திரிகையை, எமதர்மனின் காலடியில் சமர்ப்பித்து வழிபட்டு வாங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆலயத்தில் ‘படி கட்டுதல்’ என்ற வழிபாடு பிரசித்தம். நியாயமாக சம்பாதித்து காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்க, அதுபற்றி ஒரு பேப்பரில் எழுதி, எமதர்மனை பூஜித்து இங்குள்ள சூலத்தில் கட்டி விடுகிறார்கள். விரைவிலேயே அதற்கான பலனை அந்த மக்கள் அனுபவிப்பதாகவும் சொல்லப்படுகிறது. நீண்ட ஆயுள் கிடைக்க, மரண பயம் நீங்க, திருமணத் தடை அகல என்று இங்கே வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளமாம்.

திருவிழாக்கள் :

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அதே போல் மாசி மாதத்திலும் மன்மதனுக்கு திருவிழா எடுக்கிறார்கள். எமதர்மராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள்.

கோவிலுக்கு செல்வது எப்படி?

பட்டுக்கோட்டை - அறந்தாங்கி செல்லும் சாலையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம். இங்குதான் எமதர்மராஜா கோயில் உள்ளது. மேலும் பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை (ஆவணம் வழியாக) செல்லும் பேருந்துகளில் சென்றால் திருச்சிற்றம்பலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு நடந்து செல்லலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ரயில் வழிப் பயணம் என்றால் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருச்சிற்றம்பலம் செல்ல வேண்டும். அல்லது பேராவூரணி ரயில் நிலையத்திலிருந்தும் திருச்சிற்றம்பலம் செல்லலாம்.

First published:

Tags: Local News, Thanjavur