தஞ்சை மாவட்டத்தில் பல பகுதிகளில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதே நேரத்தில் வைக்கோல் இயந்திரங்கள் மூலம் வைக்கோல் சுருட்டும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.
தற்போதைய காலத்தில் விவசாயத்தை எளிதாக செய்ய வேளாண் கருவிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.. ஒவ்வொன்றிற்கும் தனி தனியான வேளான் கருவிகள் இருக்கிறது... மேலும் வரும் காலங்களில் புது விதமான இயந்திரங்களும் வர இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாடகை மூலம் வருமானம்
இந்த இயந்திரங்களை பெரும்பாலும் ட்ராக்டர் வைத்துள்ள விவசாயிகள் வாங்குகின்றனர்.. ஆனால் சொந்த பயண்பாட்டை விட அதிக அளவில் வாடகைக்கு விட்டு அதை ஒரு தொழிலாகவும் பயண்படுத்தி வருகின்றனர்..இந்த இயந்திரம் எப்படி செயல்படுகிறது, இதற்கு எவ்வளவு வாடகை பெறுகின்றனர்..இதை தொழிலாக தொடங்கினால் எவ்வளவு லாபம் பெறலாம் என்பது போன்ற நம்முடைய பல கேள்விகளை தஞ்சையை சேர்ந்த விவசாயிடம் கேட்டு தெரிந்து கொண்டோம் அவரை பற்றியும் இயந்திரம் பற்றியும் தற்போது பார்க்கலாம்.
தஞ்சை அடுத்த கருக்காடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சுரேஷ் இவர் சுமார் 12 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார் இவருடைய விவசாய பயன்பாட்டிற்காக டிராக்டர் மட்டும் வைக்கோல் கட்டும் இயந்திரத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார்.. தனிப்பட்ட விவசாய பயன்பாடுகளையும் தாண்டி மற்ற இடங்களில் வாடகைக்கும் விட்டும் வருகிறார்... மேலும் இது குறித்து அவர் கூறுகையில்:
வைக்கோல் கட்டும் இயந்திரம்:
வைக்கோல் கட்டும் இயந்திரத்தை 18- ட்ராக்டரில் கூட பயண்படுத்தலாம், வயலில் அறுவடை செய்யப்பட்டு கிடக்கும் வைக்கோலை கட்டுவதற்கு பெரிய அளவுள்ள சணல் கண்டு ட்ராக்டரில் வைக்கப்பட்டு இயந்திரத்தில் இணைக்கப்பட்டும்.. இதன் மூலம் கீழே கிடக்கும் வைக்கோலை இயந்திரத்தில் வரும் ப்ரஷர் மூலம் இழுத்து அழகாக கட்டுகிறது... ஒரு நாளைக்கு அதிக 250 கட்டு வைக்கோலை கட்டலாம், இதற்கு டீசல் செலவு என்பது ட்ராக்கடருக்கு ஆகும் செலவே, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த விவசாயி வைக்கோல் இயந்திரத்தை ரூ. 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தை பொருத்த வரையில் குறுவை,தாளடி, சம்பா என மூன்று போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.... அதனால் இங்கு எந்நேரமும் வைக்கோல் அதிக அளவில் இருக்கும் எனவே விவசாயம் பெரிதளவில் அதிகமாக நடக்காத மாவட்டங்களில் மாடு வளர்ப்பவர்களுக்கு வைக்கோல் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.. இந்த இந்த விவசாயியும் வைக்கோல் அறுவடை மட்டுமின்றி ஈரோடு கரூர், கோயம்புத்தூர், திருப்பூர் -உள்ளிட்ட கொக்கு மண்டலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறார்... ஒரு கட்டு வைக்கோலை கட்டுவதற்கு 25- ரூ செலவாகிறது , ஒரு கட்டுக்கு கூலியாக 40-ரூ பெறப்படுகிறது.
பெரும்பாலும் நில உரிமையாளர்கள் அறுவடை செய்யப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட வைக்கோலில் போதுமான அளவு அவர்கள் எடுத்துக் கொண்டே மீதம் உள்ளதை இயந்திர உரிமையாளர்களிடமே விற்று விடுவார்கள்.. இதுபோன்ற கிடைக்கும் வைக்கோலை இவர் ஒரு கட்டு 40லிருந்து 50 ரூபாய்க்கு வாங்கி வெளி மாவட்டங்களில் 100- 150 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்... இதன் மூலம் அறுவடை சீசனில் அதாவது இரண்டு மாதத்தில் அதாவது ஜனவரி பிப்ரவரி போன்ற முக்கியமான சீசனில் 2 லட்சம் வரை லாபம் பெற்று வருகிறார். இதை ஒரு தொழிலா எடுத்து செய்தால் நல்ல லாபம் பெறலாம் என இளைஞர்களுக்கு நாம் எடுத்த பேட்டி மூலம் ஊக்க ஊசியை போட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Business, Local News, Thanjavur