ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் விறுவிறுப்பாக நடந்து வரும் மரவள்ளி கிழங்கு அறுவடை

தஞ்சையில் விறுவிறுப்பாக நடந்து வரும் மரவள்ளி கிழங்கு அறுவடை

மரவள்ளி

மரவள்ளி கிழங்குகள் 

Thanjavur News: மரவள்ளிக்கிழங்கு சாகுபடி முறையில் இலைகளே அறுவடைக்கான அறிகுறியாகும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழகம் முழுவதும் அறுவடைக்கு இருந்த மரவள்ளி கிழங்குகள் அறுவடை செய்து வரும் நிலையில் தஞ்சையிலும் அறுவடை தொடங்கியது..

மரவள்ளிக்கிழங்கில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பொறுத்தவரை மக்களிடம்  நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும் நல்ல இலாபத்தை அள்ளி தரக்கூடிய ஒரு சிறந்த பயிராக விளங்குகிறது. இந்த மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பொறுத்தவரை சரியான நல்ல இரகங்கள் மற்றும் நிலம் தயாரிப்பு முறைகள் மிகவும் முக்கியம்.

மரவள்ளி கிழங்கு சாகுபடி:

செம்மண், கரிசல் மண் மரவள்ளி சாகுபடிக்கு ஏற்றதாகும்

நடவு செய்யும் முறை:

பாசன சாகுபடிக்கு இரண்டரை அடி இடைவெளியில் பார்பிடித்து அதே அளவு இடைவெளியில் பாரில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். வளமான நிலங்களுக்கு 3X3 இடைவெளி போதுமானது. மானாவாரியில் 2X2 இடைவெளிப் அமைத்து நடவு செய்ய வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை - நீர் நிர்வாகம்:

மரவள்ளி கிழங்கு சாகுபடி: நடவு செய்தவுடன் முதல் பாசனமும், அதன் பிறகு மூன்றாவது நாள் உயிர்தண்ணீரும் விடவேண்டும். பிறகு 3 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள் இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். அதற்கு மேல் 8வது மாதம் வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது. சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது மிகச் சிறந்த யுக்தியாகும். இதனால் நீர் சேமிக்கப்படும்.

மரவள்ளி கிழங்கு அறுவடை

அறுவடை:

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி முறையில் இலைகளே அறுவடைக்கான அறிகுறியாகும்.மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிரஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும்.

இந்த மரவள்ளி சாகுபடியை கடந்த 6 ஆண்டுகளாக செய்து வரும் தஞ்சையை அடுத்த நாயக்கர் பட்டி விவசாயி கூறுகையில்: நான் கடந்த 6 ஆண்டுகளாக 7 ஏக்கர் நிலப்பரப்பில் மரவள்ளி சாகுபடிக்கு செய்து வருகிறேன். மரவள்ளி சாகுபடியை பொருத்த வரையில் மிகவும் எளிமையான ஒரு விவசாயமாக தான் இருக்கிறது.

மரவள்ளி கிழங்கு

மரவள்ளி சாகுபடி 9-12 மாத காலம் வரை ஆகும், கரிசல் மண் பகுதிகளில் 8-9 மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும், ஒரு ஏக்கருக்கு எனக்கு 12- 15 -கும் அதிகமான டன் மரவள்ளி கிழங்கு கிடைக்கிறது தற்போது ஒரு டன் கிழங்கு 5000 வரை விலை போகிறது எனவே ஒரு ஏக்கருக்கு அதிக பட்சமாக 80-90 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். என்றும் கூறினார்

Published by:Ramprasath H
First published:

Tags: Agriculture, Local News, Tamil News, Thanjavur