முகப்பு /தஞ்சாவூர் /

தமிழ்நாடு பட்ஜெட்டில் தஞ்சை கைவினை கலைஞர்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள்!

தமிழ்நாடு பட்ஜெட்டில் தஞ்சை கைவினை கலைஞர்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள்!

X
மாதிரி

மாதிரி படம்

Thanjavur News | தமிழக பட்ஜெட்டில் தஞ்சாவூர் கைவினை கலைஞர்கள் தொழில்கூடம் உள்ளிட்ட பல திட்டங்கள் எதிர்பார்த்துள்ளனர். 

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், கைவினை கலைஞர்கள் அதிகம் உள்ள மாவட்டமாகவும் தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. மன்னர் காலத்தில் இருந்தே கைவினைப் பொருட்களை பாரம்பரியாமாக கைவினைப் கலைஞர்கள் செய்து வருகின்றனர். ஆண்டுகள் செல்ல செல்ல கைவினை கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-2024-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் நாளை தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் கைவினை கலைஞர்களின் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் என்ன என்பதை அவர்களிடம் கேட்டறிந்தோம். அது குறித்த காட்சிகளை தற்போது பார்க்கலாம்.

தலையாட்டி பொம்மை :

தலையாட்டி பொம்மை முன்பெல்லாம் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் தான் கிடைத்தது. ஆனால் இப்போதெல்லாம் பல சென்னை போன்ற பெருநகரங்களிலும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். வெளிநாடுகளில் வசித்து வருபவர்களும் இதன் மேல் அதிக ஆர்வத்தை காட்டி வருகின்றனர். ஆனால் தஞ்சையில் தற்போது 10 குடும்பம் மட்டுமே தலையாட்டி பொம்மை தொழிலை செய்து வருவதால் இதற்கான தேவை அதிகரித்தும் செய்வதற்கான ஆட்கள் இல்லை என வேதனை அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

எனவே அரசு இக்கலையை அழியாமல் காக்க வேலையில்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அரசே பொம்மைகளை நேரடியாக எங்களிடம் எடுத்து வெளி நாடுகளுக்கு வரை விற்பனை செய்யலாம் என்றும் கூறினர். மேலும் தற்போது வீடுகளில் செய்து வரும் கைவினை கலைஞர்களில் ஒரு சிலருக்கு சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில் செய்து வருவதாகவும், தங்களுக்கு வாடகையில் பாதி அளவில் பணத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை மேலும் அதிகப்படுத்த வேண்டும். மிஷினரியில் உருவாக்கும் ஒரு சில வேலைகளுக்கு இதனாலேயே அதிக அளவில் மின்சாரம் செலவாகிறது. இதுவே தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் இதெல்லாம் நடக்குமா? என்று அவர்கள் எதிர்பார்த்துள்ளதாக கூறினர்.

தஞ்சாவூர் கலை தட்டு :

தஞ்சாவூர் கலை தட்டு என்பது அரசு விழாக்கள் முக்கிய நிகழ்வுகளில் நினைவு பரிசாகவும், கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படும். தற்போது இந்த பட்ஜெட்டில் கலைத்தட்டு தயாரிக்கும் கைவினை கலைஞர்களின் சங்கத்தினரிடம் சென்று அவர்களது கோரிக்கையும் கேட்டும் அறிந்தோம்.

அவர்கள் கூறுகையில், “எம்ஜிஆர், கலைஞர் இருந்த காலகட்டத்தில் கலைத்தட்டு அரசு விழாக்களில் அதிக அளவில் வாங்கி பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த கலை மிகவும் நலிவடைந்து வருகிறது. பூம்புகார் மையம் என்று ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அது எங்களுக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. இந்த தொழிலை அழியாமல் காப்பதற்காக அரசு எங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டும். மேலும் தொழில் மையம் ஏற்படுத்தி வேலையற்றோருக்கு பயிற்சி அளிக்கவேண்டும்” என்றும் கோரிக்கையை வைத்துள்ளனர்.

மரக்குதிரை :

மரக்குதிரை தயாரிப்பில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை பூக்கார தெருவில் செய்து வரும் பெண்மணி புஷ்பலதா. இவர் கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் தற்போது தனி பெண்ணாகவே மரக்குதிரை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் முக்கியமாக தமிழகத்திலேயே இவர் மட்டும் தான் மரக்குதிரை செய்து வருவது என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவர் இந்த தொழில் குறித்த பல கோரிக்கைகளை இந்த பட்ஜெட்டில் வைத்துள்ளார் அதில் முக்கியமாக .. மரக்குதிரை தயாரிப்பதை வீட்டில் வைத்தே செய்து வருவதால் எனக்கு கடை வசதி இல்லாததால் மிகவும் சிரமமாக இருக்கிறது. மேலும் இந்த மரக்குதிரையை பள்ளிகளிலும் அரசே எடுத்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இக்கலையை வளர்க்க பெரிதளவில் ஆள் இல்லாததால் வேலையற்றோருக்கு இதன் மூலம் பயிற்சி அளித்து அவர்களது வாழ்வாதாரத்தையும் உயர்த்த அரசு வழி வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.

First published:

Tags: Local News, Thanjavur, TN Budget 2023