தஞ்சாவூர் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான மாற்று திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணியின்90 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் வகையில், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மற்றும் தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கத்துடன் இணைந்து வேந்தர் கோப்பை மாற்று திறனாளிகளுக்கு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பாரா கைபந்து சாம்பியன்ஷிப் மாற்று திறனாளிகள் தினத்தன்று நடந்து முடிந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல மாற்று திறனாளிகள் கலந்துகொண்டு பரிசுகளையும் பெற்றனர். இந்த போட்டியில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி துணை மேயர், பாரா வாலிபால் சங்கத்தினை சேர்ந்தவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதையும் படிங்க : தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு
இறுதியாக வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசினை வெல்லூர் மாவட்டமும், இரண்டாம் பரிசினை கடலூர் மாவட்டமும், மூன்றாம் பரிசினை ராணிபேட்டை மாவட்டமும், நான்காவது பரிசினை திருவள்ளுவர் மாவட்டமும்பெற்றது.
பெண்கள் அணியில் முதல் பரிசினை மதுரை மாவட்டமும், இரண்டாவது பரிசினை விருதுநகர் மாவட்டமும் பெற்றனர். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ஆண் மற்றும் பெண்கள் பாரா வாலிபால் போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் 16 பேர் தேசிய அளவில் நடக்க இருக்கும் பாரா வாலிபால் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர்கள் என்பதை தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கத் தலைவர் ஜி.ராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு பாரா கைப்பந்து சங்க தலைவர் கூறுகையில், ‘இன்று மாற்று திறனாளிகள் தினம். கருணாநிதி முதல்வராக இருக்கும் து உடல் ஊனமுற்றோர் என்பதை மாற்றுதிறனாளிகள் என்று குறிப்பிட்டார். மேலும் நமது முதல்வர் ஸ்டாலின்,மாற்று திறனாளிகள் தினத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாட வேண்டும்” என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், ஜனவரி மாதத்தில் மாற்று திறனாளிக்கான விளையாட்டு போட்டி சென்னையில் நடக்க இருப்பதாகவும், அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வர இருப்பதாகவும் கூறினார். என்றைக்கும் மாற்று திறனாளி பெண்கள் எதற்கும் சளித்தவர்கள் அல்ல. மாற்றம் செய்யும் திறனாளிகள் என்றும் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore