முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை புதுப்பட்டினம் சித்தி விநாயகர் ஆலயத்தில் குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம்..!

தஞ்சை புதுப்பட்டினம் சித்தி விநாயகர் ஆலயத்தில் குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம்..!

X
குருபகவானுக்கு

குருபகவானுக்கு 108 திரவிய ஹோமம் 

Tanjore Pudupattinam Siddhi Vinayagar Temple | தஞ்சாவூர் புதுப்பட்டிணம் ஊராட்சி  ராதாகிருஷ்ணன் நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி-யை  முன்னிட்டு பரிகார ஹோமமும் குரு பகவானுக்கு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Thanjavur, India

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதையே குரு பெயர்ச்சி எனப்படும். குரு பகவான் அப்படி ஒரு ராசிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்து அவர் மற்ற ராசிகளை பார்ப்பதால் ஏற்படும் பலன்களையே குரு பெயர்ச்சி பலன்கள் என சொல்லப்படுகிறது‌.

அதன்படி இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சசியானது குரு பகவான் (ஏப்ரல் 22, 2023) காலை 5.14 மணியளவில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் பெயர்ச்சி ஆகி உள்ளார். இவர் வரும் செப்டம்பர் 4ம் தேதி மேஷ ராசியிலேயே அதிசார பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார்.

2023 டிசம்பர் 31ம் தேதி மீண்டும் வக்ர நிவர்த்தி அடைந்து,நேர்கதி பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார். 2024ம் ஆண்டு மே 1ம் தேதி வரை மேஷத்தில் இருக்கும் இவர், மே 2ம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சி செய்வார். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் நேரடியாக விழுவதால் சிம்மம், துலாம், தனுசு ராசிக்கு கூடுதல் சுப பலன்கள் கிடைக்கும்.

சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு ஹோமம் :

தஞ்சை புதுப்பட்டினம் ஊராட்சி ராதாகிருஷ்ணன் நகரில் பக்தர்களின் நம்பிக்கையாக விளங்கி வரும் சித்தி விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ள குருபகவனுடைய அனுகிரகமானது எல்லா ராசியினருக்கும் கஷ்டங்கள் விலகி அனைத்து பலன்களும் கிடைக்க குருபகவானுக்கு நவகிரக ஹோமங்கள் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஹோமத்தில் குருபகவானுக்கு விஷேசமாக 108 திரவிய ஹோமங்கள் நடைபெற்றது.. அதனை தொடர்ந்து குருபகவானுக்கு திரவியப்பபொடி, மஞ்சப்பொடி, அரிசிமாவு,பால், தயிர்,தேன், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருவின் பார்வை பெற சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Thanjavur