முகப்பு /தஞ்சாவூர் /

சிவாஜி முதல் பிரபு வரை.. பலருக்கும் ஃபேவரட் ஆன குணங்குடி சர்பத் நிலையம்!

சிவாஜி முதல் பிரபு வரை.. பலருக்கும் ஃபேவரட் ஆன குணங்குடி சர்பத் நிலையம்!

X
குணங்குடி

குணங்குடி தாசன் சர்பத் 

Thanjavur sarbath | 80 வருடமாக தஞ்சை மக்களோட தாகத்த கூல் பன்னிட்டு இருக்கும் தஞ்சாவூர் குணங்குடி தாசன் சர்பத் நிலையம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் ஜிகர்தண்டா இன்றளவும் ஆக்கிரமிக்க முடியவில்லை. காரணம், அதைத்தான் நாங்கள் முக்கால் நூற்றாண்டுகளுக்கு மேல் பால் சர்பத் என்ற பெயரில் குடித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகின்றனர் தஞ்சாவூர் மக்கள். அட ஆமாங்க 80 வருடமாக தஞ்சை மக்களோட தாகத்த கூல் பன்னிட்டு இருக்குது தஞ்சாவூர் குணங்குடி தாசன் சர்பத் நிலையம்.

குணங்குடி தாசன் சர்பத்துக்க்கு காலத்தை தாண்டிய ரசிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இந்த கடையின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். குறிப்பாக  சிவாஜி முதல் பிரபு வரை, மூப்பனாரில் இருந்து ஜி.கே.வாசன் வரை குணங்குடி தாசன் சர்பத்துக்கு ஃபேன்-னு கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே சர்பத்த பார்சல் வாங்க வரும் கவர் அல்லது சின்ன வாளி கொண்டு வருவது வழக்கம். ஆனால், குணங்குடி தாசனின் சர்ப்பத்தை வாங்க வரும் மக்கள், அண்டாவையே எடுத்து கொண்டு வருகிறார்கள்.

இவ்வளவு பிரபலமான கடையை கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு அப்துல்லா என்பவர் தொடங்கியுள்ளார். கடை தொடங்கிய போது அப்துல்லாவுக்கு ஏதாவது புதுசா செய்ய வேண்டும் எண்ணம் எழுந்துள்ளது. அதன் படி சர்பத்தில் நார்த்தாங்காய் கலக்கும் எண்ணத்தை கொண்டு, தற்போது தஞ்சாவூரையே கலக்கி கொண்டு வருகிறார். நார்த்தாங்காய் நல்ல குலுமை அதுமட்டுமின்றி தஞ்சாவூர் பகுதிகளில் எப்போவுமே நார்தாங்காய் கிடைக்கும்.

‘பத்து பங்கு நன்னாரி வேருக்கு மூன்றரைப் பங்கு ரசம் வடிக்க வேண்டும்'னு சொல்வாங்க. நன்னாரிக்கு மட்டும் இல்லை. பால், பாதாம் பிசின், நார்த்தங்காய் இப்படி எல்லாத்துக்கும் பக்குவம் உண்டு. இந்தப் பக்குவம்தான் ருசிக்கு முக்கியக் காரணம். எல்லாத்தையும் இன்றைக்கும் தவறாமல் கடைப்பிடிக்கிறோம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை போல. தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக எங்க சர்பத்தும் இடம் பிடிக்கக் காரணம் இதுதான், எங்க கடைய பத்தி நாங்களே ரொம்ப பேச விரும்பல எங்க கடைக்கு வர 90% பேர் ரெகுலர் கஸ்டமர் தான். அவர்களிடமே கேளுங்கள் என்று சொல்லுகிறார் கடையின் உரிமையாளர்.

மேலும் இங்கு நன்னாரி சர்பத் 25 ரூபாய்க்கும், பால் சர்பத்- மற்றும் ரோஸ் மில்க் 35 ரூபாய்க்கும், நன்னாரி பாட்டில் 90 ரூபாய்க்கும் கொடுக்கப்படுவதால் கடையில் கூட்டம் அலைமோதுகிறது.

First published:

Tags: Local News, Nannari Sarbath, Thanjavur