Home /thanjavur /

தஞ்சையில் நாளை ஊரக வேலை வாய்ப்பு பணியாளர்களுக்காக குறைதீர் முகாம்

தஞ்சையில் நாளை ஊரக வேலை வாய்ப்பு பணியாளர்களுக்காக குறைதீர் முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு, குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் அலுவலக வளாக தரைதளத்தில் உள்ள குறைதீர் கூட்ட அறையில் நாளை( செவ்வாய் கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தஞ்சை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்று திறனாளிகளுக்கு பணி வழங்குதல், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் அலுவலக வளாக தரைதளத்தில் உள்ள குறைதீர் கூட்ட அறையில் நாளை ( செவ்வாய் கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், இந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி