தஞ்சையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி படியில் நின்றவாறு பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மருங்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் இவ்வூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த சுமார் 1,000 மாணவர்கள் படித்து வரும் நிலையில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோபால் நகர், சின்னையன் குடிக்காடு, நாயக்கர் பட்டி, நடுப்பட்டி, பருக்கை விடுதி ரகுநாதபுரம்,உளவயல் ஆகிய கிராமங்களில் இருந்து படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு காலை, மாலை என இரு நேரங்களிலும் போதிய அளவில் பேருந்து வசதி இல்லை. காலை நேரத்தில் வரும் பேருந்தில் தஞ்சைக்கும் வெளியூர்களுக்கும் வேலைக்கு செல்லும் பயணிகளின் கூட்டமும் பொது மக்களின் கூட்டமும் அதிக அளவில் இருக்கும். இருந்தும்இந்த மாணவர்கள் இதிலேயே பயணம் செய்யும் நிலையும் ஏற்படுகிறது. மாணவர்கள் இந்த பேருந்துகளில்வந்தால் தான்பள்ளிக்கு நேரத்தில் வர முடியும்.இதில் பலர் பேருந்தை தவறவிடுவதாலும்ஏற முடியாமலும் இருப்பதால் லிப்ட் கேட்டும் சிலர் நடந்தும் பள்ளிக்கு நேரம் தாழ்ந்து வருகின்றனர்.
மாலை நேரத்தில் 4:15க்கு பள்ளி முடியும் நிலையில் நான்கு 4:15-க்கு ஒரு பேருந்து வருகிறது. ஒரே நேரத்தில் வருவதால் இந்த பேருந்தை பயண்படுத்த முடியாது.மாலை 5:30 மணிக்கு ஒரு பேருந்து வருகிறது. இந்த பேருந்திலும் மாலை நேரத்தில் அதிக அளவிலான நெருக்கடிதஞ்சையில் இருந்து வருகிறது. இந்த நெருக்கடியிலும் மேலும் மாணவர்கள் ஏறி பயணம் செய்யும் நிலையில் உள்ளார்கள்.
இந்த பேருந்தையும் விட்டால் இரவு 7:30 அல்லது 8 மணிக்குதான் பேருந்து. அதனால் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல 9 மணி ஆகிவிடுகிறது.இதனால் அனைவரும் இந்த 5:30 மணி பஸ்ஸில் தான் பயணம் செய்கின்றனர்.இதில் பேருந்தில் இடம் இல்லாமல் படியில் தொங்கியவாரே ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பலர் கைவலி தாங்க முடியாமல் கீழேயும் விழுந்து விபத்திலும் சிக்கி உள்ளனர். இது தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகிறது இதுவரை பள்ளி நிர்வாகமோ அரசோ கண்டுகொள்ளவில்லை எனவும் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் .
இதையும் படிங்க | தஞ்சை சுவாமிமலையில் திருகார்த்திகை விழா துவங்கியது...
மேலும் இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘இந்த நிலை தான் தினமும் உள்ளது. நாங்கள் என்ன செய்வோம். உரிய நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும். உரிய நேரத்தில் வீட்டுக்கு செல்ல வேண்டும். இப்படி நாங்கள் ஒரு நாளில் கூட செல்லவில்லை.காரணம் பேருந்து வசதி இல்லாமல் இருப்பது. பேருந்தில் படியில் பயணம் செய்கிறோம்என்றால் என்ன செய்வது? பேருந்து வசதி கொடுத்தால் நாங்கள் ஏன் படியில் பயணம் செய்யப் போகிறோம்.கை வலி தாங்க முடியாமல் கீழேயும் விழுந்து விபத்திலும் சிக்கி வருகிறோம்.இதற்கு அரசு தான் ஏதாவது பார்த்து பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Local News, School students, Thanjavur