அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்
தஞ்சாவூர் மாவட்டத்தில், வீடு இல்லாத மற்றும் ஏழை எளியோர்களுக்காக குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. இந்த குடியிருப்புகளை பெற மக்கள் எவ்வாறு விண்ணப்பது என்பதைக் காணலாம்.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வல்லம் அய்யனார் கோயில் திட்டப்பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவைகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குடியிருப்புகளை பெற விரும்பும்வோர்களின் ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
சொந்த நிலம், வீடு இருக்க கூடாது, பொருளாதாரத்தில் நலிவடைந்தவராக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் மற்றும் கணவரை இழந்தவர், கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:- தங்கள் விண்ணப்பத்துடன் குடும்ப தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை, உணவுப் பங்கீடு அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அய்யனார் கோயில் திட்டப் பகுதியிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை அணுக வேண்டும்.
அலுவலக வேலை நாட்களான வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணுக வேண்டும்.
ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8667350694, 8667756031 மற்றும் 8523962235 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த அறிவிப்பை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.