ஹோம் /தஞ்சாவூர் /

வாத்து வளர்ப்புக்காக தஞ்சையை தேடி வந்த கிருஷ்ணகிரி பெண்.. என்ன வருமானம்? கஷ்ட நஷ்டங்கள் என்ன?.

வாத்து வளர்ப்புக்காக தஞ்சையை தேடி வந்த கிருஷ்ணகிரி பெண்.. என்ன வருமானம்? கஷ்ட நஷ்டங்கள் என்ன?.

தஞ்சை

தஞ்சை

Duck Farming | தஞ்சாவூர், மாவட்டம் பாச்சூர் கிராமத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த வாத்து வளர்ப்பு தொழிலாளிகள் ஆண்டுதோறும் இந்த பாச்சூர் கிராமத்தில் 2 மாதங்கள் மாதங்கள்‌ தங்கி வயல்வெளிகளில் சுமார் 1500 வாத்துகள் மேய்கிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

பொதுவா கிராம பகுதிகளில் வயல்வெளிகளில் வாத்துகள் மேயுறது பாத்துறுப்போம், பெரும்பாலும் இந்த தொழிலாளிகலாம் சொந்த ஊர்ல வாத்து மேய்க்க மாட்டாங்க. வெளியூர்களில் இன்னும் சொல்லப்போனா வெளி மாவட்டங்களில் கூட போயிட்டு வயல்வெளிகள்ல அறுவடை காலம் முடிந்த பிறகு ஆயிரக்கணக்கான வாத்துகள மாத கணக்குல தங்கி வாத்துகள மேய்பாங்கஇப்ப அந்த வாத்து வளர்ப்பு முறை பற்றியும் இவங்களோட வாழ்க்கை முறை பற்றியும் இந்த சிறப்பு காணலாம்..

தஞ்சாவூர், மாவட்டம் பாச்சூர் கிராமத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த வாத்து வளர்ப்பு தொழிலாளிகள் ஆண்டுதோறும் இந்த பாச்சூர் கிராமத்தில் 2 மாதங்கள் மாதங்கள்‌ தங்கி வயல்வெளிகளில் சுமார் 1500 வாத்துகள் மேய்கிறார்கள்.

வாத்து வளர்ப்பு முறை:

கிருஷ்ணகிரியை சேர்ந்த வாத்து வளர்ப்பு தொழில் செய்து வரும்  விஜி சொந்த ஊரில் 6 மாதமும் வெளி மாவட்டங்களில் 6 மாதமும் வாத்து வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.. இதில் அறுவடை காலம் முடிந்த பிறகு சிதறி வயலில் இருக்கும் நெல்கள் வாத்துகளுக்கு உணவாகிறது.... காலை 7 மணி- பட்டியில் இருந்து வாத்துகளை விவசாய நிலத்தில் திறந்து விட்ட பிறகு மாலை 6 மணிக்குள் பட்டியில் அடைத்து விடுகிறார்கள்‌. இது சுழற்சி முறையாக நடக்கும்.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

இது போல் தெரியாத கிராமங்களுக்கு தொழிலுக்காக வரும் இவர்கள்  2  - 3 மாதங்கள் வயல் வெளி பக்கத்திலோ..ரோடு ஓரத்திலோ சிறியதாக ஷெட் போல் போட்டு தங்கிவிடுகின்றனர்.. இதில் ஏராளமான சிக்கல்களையும் அனுபவிக்க வேண்டியதாகி விடுகிறது. மழை காலங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். இரவில் பாம்பு, பூச்சி தொல்லைகள் ஏராளம்.  சில கிராமங்களில் மக்கள் சரியான ஒத்துழைப்பு தர மறுப்பதுடன், இரவில் வாத்துகளை திருட திருடர்களும் வந்துவிடுகின்றனர்.  இந்த கிராமத்தில் மக்கள், எங்கள் கஷ்டம் உணர்ந்து முழு ஒத்துழைப்பு தருவதால் தான் ஆண்டுதோறும் இங்கு வந்து தொழில் செய்வதாக கூறுகின்றனர்.

வாத்து வளர்ப்பு

வாத்து மூலம் என்ன வருமானம்?

வாத்து  முட்டைகள் தான் இவர்களுக்கு பிரதான வருமானமாக இருக்கிறது.  வாத்து முட்டைகள் அதிக அளவில் கேரளாவிற்கு தான் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன..   முட்டைகள் ஒரே விலையில் இருக்காது விலை மாதம் மாதம் விலையானது மாறுபடும்.தற்போது ஒரு முட்டை ரூ.4.50 பைசாவிற்கு விலை போகிறது.. இந்த 1500 வாத்துகள் மூலம் கிடைக்கும் மாத வருமானம் 30-35 ஆயிரம் ஆக இருக்கிறது.. இதில் வாத்துக்களை கொண்டு வரும் பயண செலவு, ஆள் கூலி, தனிப்பட்ட செலவுகள் போக மாதம் ரூ.12-15-ஆயிரம் வரை மிஞ்சும்..மேலும் வாத்துகள் உயிருடன் 150-200-க்கு விற்கப்படுகிறது.

வாத்து வளர்ப்பு

மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

வாத்து வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விஜி கூறுகையில், “நல்ல தொழில் தான் சொந்த ஊரிலேயே வளர்த்தால் செலவுகள் குறையும். மாத வருமானம் அதிகமாகவும் இருக்கும். 6 மாதம் வெளியூர்களில் தான் வளர்த்து வருகிறோம்‌‌... பல ஊர்களில் ஒத்துழைப்பு கிடைக்க வில்லை தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் அதிகமாக இருப்பதால் இங்கு வந்தோம் இங்கு ஒத்துழைப்பு கிடைத்து, மேலும் அடுத்து கும்பகோணம் சென்று அங்கு உள்ள கிராமத்தில் மேய்க்க உள்ளோம்” என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur