முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / சயனைடு குறித்து விசாரணை... காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக நகைக் கடை உரிமையாளர்கள் போராட்டம்

சயனைடு குறித்து விசாரணை... காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக நகைக் கடை உரிமையாளர்கள் போராட்டம்

நகை பட்டறை கடைகள அடைப்பு

நகை பட்டறை கடைகள அடைப்பு

Thanjavur | காவல்துறையினரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட நகைத் தயாரிப்பாளர்கள் பட்டறை கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் கடந்த 21-ம் தேதி அரசு மதுபான கடை அருகே உள்ள பாரில் கடை திறப்பதற்கு முன்பே மது வாங்கி குடித்த விவேக் மற்றும் குப்புசாமி என்ற இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கை வந்தது.

இதனை அடுத்து அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? மேலும் அவர்களுக்கு சயனைடு எப்படி வந்தது அல்லது அவர்கள் குடித்த மதுவில் யாரும் சயனைடு கலந்து கொடுத்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விசாரணையில் எந்த தடயங்களும் கிடைக்காததால் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை.

இதனால் மதுபான கடைக்கு சயனைடு எப்படி வந்தது என எந்த தடயங்களும் காவல்துறைக்கு கிடைக்காதால், சயனைடு பயன்படுத்தும் நகைப் பட்டறை உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க... தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த திட்டம்? மின்வாரியம் சொல்லும் விளக்கம் என்ன?

இந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களை அழைத்துச் சென்று அவர்களை விடாமல் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டும் நகை பட்டறை உரிமையாளர்கள், காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று அய்யங் கடை தெரு, காசுக்கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைப் பட்டறை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

First published:

Tags: Gold, Jewelry shop, Thanjavur