முகப்பு /தஞ்சாவூர் /

பழங்கள் வாங்கினால் புத்தகம் இலவசம்.. தஞ்சாவூர் பழ வியாபாரி புது முயற்சி!

பழங்கள் வாங்கினால் புத்தகம் இலவசம்.. தஞ்சாவூர் பழ வியாபாரி புது முயற்சி!

X
பழங்கள்

பழங்கள் வாங்கினால் புத்தகம் இலவசம்

Thanjavur News | வளரும் தலைமுறையினரிடம் புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கடந்த 11 ஆண்டுகளாக தனது கடையில் பழங்கள் வாங்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு புத்தகத்தை இலவசமாக வழங்கி வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த பழ வியாபாரி.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் பூக்கார தெருவில் சுப்பிரமணியர் கோவில் எதிரே வசித்து வருபவர் என்.காஜாமொய்தீன்(63). இவர், தன்னுடைய வீட்டின் முன்பக்கத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈர்க்கப்பட்டவர் என்பதால், எல்லோரும் இவரை தோழர் எனவும், இவரது கடையை தோழர் பழக்கடை எனவும் அழைத்து வருகின்றனர். இவர், புத்தகம் வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில், தன்னுடைய கடையில் பழங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சிறுவர் கதைகள், தமிழ்- ஆங்கில அகராதி போன்ற ஏதாவது ஒரு சிறிய புத்தகத்தை இலவசமாக வழங்கி வருகிறார்.

இதுகுறித்து காஜாமொய்தீன் கூறுகையில், “நான் 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். என்னுடைய குடும்ப சூழ்நிலையால் என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. ஆனாலும், தினமும் புத்தகங்கள் வாசித்து வருகிறேன். என்னுடைய இளம் வயதிலேயே பூக்காரத் தெரு பகுதியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வந்தேன்.

நான் காதல் திருமணம் செய்து என் மனைவியை நன்றாக படிக்க வைத்தேன். பல கஷ்டங்களுக்கு பிறகு என் மனைவி அரசு பள்ளியில் தலைமையாசிரியராகினார். எனது மகனும் அட்வகேட்டாக உள்ளார். என் மனைவி, பிள்ளையை நன்கு படிக்க வைத்தேன். அதனால் என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை என் குடும்பத்தில் ஒருவராக எண்ணி வாசிப்பு திறன் பழக்கத்தில் ஏற்படுத்திகொள்ள குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை புத்தகம், குங்குமச்சிமில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை அன்பில் அடிப்படையில் கடந்த 11 ஆண்டுகளாக வழங்கி வருகிறேன்.

வாடிக்கையாளர்கள் என்னை ஒரு வியாபாரியாக பார்ப்பதில்லை. அப்பாவாக, நண்பராக, தோழராக, தாத்தாவாக என அன்போடு பழகுகின்றனர். மனிதர்கள் தான் முக்கியம் காசு பணம் எல்லாம் நிரந்தரம் இல்லை, ஏன் என் உடலையே தஞ்சாவூர் மருந்துவ கல்லூரிக்கு முழு உடல் தானம் செய்துள்ளேன்” என்று பெருமையாக கூறினார். கேட்பதற்கே வியப்பாக இருக்கிறது அல்லவா இவரைப் போன்ற பல மனிதர்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நம்மில் பலர் காசு, பணம், லாபம் என சூழலுக்குள் மாட்டிகொண்டு அதன் பின்னாடி ஓடி திரிகிறோம். இவையெல்லாம் முக்கியம் இல்லை மனிதர்களின் அன்பு தான் நிரந்தரம் அதை தான் இவர் சம்பாதிக்கிறார்.

First published:

Tags: Local News, Thanjavur