தஞ்சை அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையில் ஒன்று. இந்த பண்டிகையின் போது தான் தமிழர்களின் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும்...
குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும்; தமிழ்நாடு,இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மிக சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரிய பகவானுக்கும்,மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றி அறிதலையே பொங்கலின் சிறப்பாகும்...
இந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கல் விழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு முடிந்தது.
தஞ்சையில் பொங்கல் விழா:
தஞ்சையின் பல கிராமங்களில் பொங்கல் விழாவானது ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கோனூர்நாடு வடக்கூர் கிராமத்தில் நேற்று காணும் பொங்கல் விழாவை ஒட்டி விளையாட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் விழாவிற்கு வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து சுற்றுலாப் பணிகள் வந்த வண்ணமே உள்ளனர் ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது தவறாமல் இந்த கிராமத்தில் சுற்றுலா பயணிகள் வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இது இந்த கிராமத்திற்கே ஒரு சிறப்பாக இருந்து வருகிறது.
கிராமத்து இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போன்ற போட்டிகளில் கலந்து கண்டு மனம் மகிழ்ந்து செல்ஃபிகளை எடுத்துள்ளார்கள்.
இரண்டு நாள் நடந்த பொங்கல் விழாவில் இந்த கிராமத்தில் நேற்று காணும் பொங்கல் விழாவையொட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பலவிதமான போட்டிகள் வைக்கப்பட்டது.. ஆரவாரத்துடன் களைகட்டிய பொங்கல் விழா தமிழகம் முழுவதும் பல கிராமங்களில் ஒவ்வொரு விதமான சிறப்புகளுடன் நேற்று நடந்து முடிந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pongal 2023, Pongal festival, Thanjavur