முகப்பு /தஞ்சாவூர் /

வைகாசி மாத சிவராத்திரி முதல் பிரதோஷம்.. தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலம்..

வைகாசி மாத சிவராத்திரி முதல் பிரதோஷம்.. தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலம்..

X
வைகாசி

வைகாசி மாத சிவராத்திரி முதல் பிரதோஷம்

Thanjavur Periya Kovil : உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் வைகாசி மாத சிவராத்திரி முதல் பிரதோஷத்தை முன்னிட்டு மகா நந்திக்கு ‌ சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வைகாசி மாத சிவராத்திரி முதல் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

வைகாசி மாதத்தில் வருகிற முதல் பிரதோஷத்தில் சிவனை வழிபடும் சிறந்த நாளான நேற்று (17.05.2023) மாத சிவராத்திரியும் சேர்ந்த சிறப்பான நாளாக அமைந்துள்ளது. மாத சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் துயரங்கள் தீரும். பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

பெரிய கோயிலில் வைகாசி மாத சிவராத்திரி பிரதோஷம்:- உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் வைகாசி மாத சிவராத்திரி முதல் பிரதோஷத்தை முன்னிட்டு மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

வைகாசி மாத சிவராத்திரி முதல் பிரதோஷம்

பிரதோஷத்தில் பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், எலுமிச்சை சாறு , திரவியம் பொடி, கரும்புச்சாறு, அரிசிமாவு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சிவலிங்கத்திற்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Thanjavur