Home /thanjavur /

தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சாவூரில் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதில், தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் விவசாயம் குறித்தும் அதன் தொடர்புடைய துறைகள் குறித்தும் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடக்கிறது. இந்த கூட்டமானது, தஞ்சாவூர் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தலைமையில் நடக்கிறது.

    இதில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிக்கலாம். மேலும், இதில், வோளண்மை, தோட்டக்கலைத்துறை, நீர்பாசனம், கூட்டுறவு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக கழகம், கால்நடை, மின்சாரம், தொடர்புடைய கருத்துக்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில், விவசாயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது.

    மேலும், இதுகுறித்து விவசாயிகள் மனுவாகவும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்ட அரங்கிற்கு வரும் முன் கணிணியில் தங்களது பெயர் முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவை பதிவு செய்ய வேண்டும். மேலும், மனுக்களை கொடுக்கும் முன் ஒப்புதல் பெற்று, கணிணியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி