ஹோம் /தஞ்சாவூர் /

நம்ம தஞ்சையில் அசத்தலான பேன்சி ரக பட்டாசுகள் வாங்குங்க.. ரகமும்.. விலையும்...

நம்ம தஞ்சையில் அசத்தலான பேன்சி ரக பட்டாசுகள் வாங்குங்க.. ரகமும்.. விலையும்...

தஞ்சையில்..

தஞ்சையில்.. அசத்தலான பேன்சி ரக பட்டாசுகள்

Thanjavur Crackers Shop | தஞ்சாவூர் மாகர்நோன்பு சாவடியில் உள்ள தனலெட்சுமி பட்டாசு கடையின் உரிமையாளர் மாரிமுத்து நம்மிடம் பேசுகையில், பேன்சி ரக பட்டாசு ரகங்கள் குறித்தும், அவற்றின் விலை குறித்தும் எடுத்துரைத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தீபாவளி  ரொம்பவே நெருங்கிடுச்சி.. இந்த நேரத்துல பட்டாசு வெடிப்பதற்கு நம்ம தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதிச்சிருக்காங்க. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் அதிக ஒலி எழுப்பகூடிய பட்டாசுகளை வெடிக்க கூடாதுனும் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது பேன்சி ரக பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்..

இதை பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்வதற்கு தஞ்சாவூர் மாகர்நோன்பு சாவடியில் உள்ள தனலெட்சுமி பட்டாசு கடையை அனுகினோம். அக்கடையின் உரிமையாளர் மாரிமுத்து நம்மிடம் பேசுகையில், முன்னர் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்பட்டது, தற்போது எப்படி மக்களின் கொண்டாட்ட மனநிலை உள்ளது எனவும் பேசினார். மேலும் பேன்சி ரக பட்டாசு ரகங்கள் குறித்தும், அவற்றின் விலை குறித்தும் எடுத்துரைத்தார்.

பல இடங்களுக்கு தற்போது அதிக ஒலி, மாசு கட்டுப்பாடு உள்ள பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வெடிக்கும் பேன்சிரக பட்டாசுகள் இருக்கிறது..

மேலும் படிக்க:  தஞ்சாவூர் மாவட்டத்தில் மறக்காமல் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.!

உதாரணமாக 160, 290 டிகிரி சுழன்று காட்சியளிக்கும் பட்டாசுகள், ட்ரோன் கேமரா போல் மேலேயே சுழன்று வண்ண வண்ணமாக ஒளிரும் பட்டாசுகள், இசையுடன் வெடிக்கும் பட்டாசுகள், வண்ண வண்ணமாக வெடிக்காமல் காட்சியளிக்கும் பட்டாசுகள் போன்ற பல வகையான குழந்தைகள் கவரும் வகையில் இருக்கிறது.. வித விதமான கம்பி மத்தாப்புகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாகர்நோன்பு சாவடியில் உள்ள தனலெட்சுமி பட்டாசு கடை

இந்த பேன்சி ரக பட்டாசுகள் குறைந்த பட்சமாக ரூ 75- லிருந்து - ரூ 1500-வரை இருக்கிறது... மேலும் அணைத்து வகையான பட்டாசுகளும் ...பசுமை ஸ்டான்டர்டு பட்டாசுகள் மட்டுமே இருக்கிறது.. மேலும் வெடி கிஃப்ட் பாக்ஸ் ரூ-700-4500-ரூ வரை விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

“எங்க கடை நிரந்தர உரிமம் பெற்ற கடையாகும் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.. இதில் 90' கிட்ஸ் தான் முன்பெல்லாம் தீபாவளி ஒரு மாதம் முன்பே வெடிகள் வாங்கி வெடிபார்கள் ஆனா தற்போது 2K கிட்ஸ்-யை ஒப்பிடும்போது போது மிகவும் குறைவாகதான் வெடிக்கின்றனர்..மொபைல் போன் போன்றவற்றில் மூழ்கி சிந்தனை மாறி இருக்கின்றனர்‌‌... இருந்தும் பலர் தற்போது புது ரக பேன்சி ரக‌ பட்டாசுகளை அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர்” என்று கூறினார்..

பட்டாசுகள் வாங்க தொடர்புக்கு:

மாரிமுத்து (94431 88531)

தனலெட்சுமி பட்டாசு கடை

மாகர்நோன்பு சாவடி

தஞ்சாவூர்,

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Thanjavur