முகப்பு /தஞ்சாவூர் /

பார்வையாளர்களை கவரும் பழங்கால கற்சிலைகள்.. தஞ்சையில் மிஸ் பண்ணக்கூடாத ஸ்பாட்!

பார்வையாளர்களை கவரும் பழங்கால கற்சிலைகள்.. தஞ்சையில் மிஸ் பண்ணக்கூடாத ஸ்பாட்!

X
பார்வையாளர்களை

பார்வையாளர்களை கவரும் பழங்கால கற்சிலைகள்

Thanjavur News : கண்களை கவரும் பழங்கால கற்சிலைகளை காண தஞ்சாவூரில் உள்ள இந்த ஸ்பாட்டுக்கு கண்டிப்பா போங்க.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்டு அருங்காட்சியகம் 7டி திரையரங்கம், அரியவகை வெளிநாட்டு பறவைகள் பூங்கா அமைத்த நிலையில் டெல்டா பகுதி மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விருந்து படைத்து வருகிறது. இந்த அருங்காட்சியகம் மற்றும் பறவைகள் பூங்காவில் உள்ள அனைத்து அற்புதமான அமைப்புகளும், பழைமையான பொருட்களும் பார்ப்பவர் மனதில் நிலைத்து நிற்க செய்து வருகிறது. இந்நிலையில், அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால சிற்ப காட்சியகத்தில் உள்ள பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள கற்சிற்பங்களை பொதுமக்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

பழங்கால கற்சிலைகள் :

15ம் நூற்றாண்டில் உள்ள மகா விஷ்ணு மற்றும் படி அணைப்பு யாழி, 14, 15ம் நூற்றாண்டில் உள்ள மகா வீரர், 12, நூற்றாண்டில் உள்ள முருகன், 16, 17ம் நூற்றாண்டில் உள்ள பைரவி மற்றும் திருமால், 15, 16ம் நூற்றாண்டில் உள்ள பெண் தெய்வம் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய கற்சிலைகள் உள்ளன. மேலும் 13ம் நூற்றாண்டில் உள்ள பைரவர், 10, 11ம் நூற்றாண்டில் உள்ள சிவன், 10, 11ம் நூற்றாண்டில் உள்ள புத்தர் ஆகிய கற்சிலைகள் உள்ளன. 18, 19ம் நூற்றாண்டின் அம்மன் சிலை, 18ம் நூற்றாண்டில் உள்ள ராகு, கேது, சூரியன் கற்சிலைகள் சிலைகள், 18ம் நூற்றாண்டில் உள்ள நதி தேவதை ஆகிய கற்சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கற்சிலைகளை பார்ப்பதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கொண்டு சென்று யோசிக்க வைப்பது போல உணர முடிகிறது என இங்கு வரும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : தஞ்சையில் முருகனுக்கு ஆறுபடை வீடு இருக்கு தெரியுமா?

முக்கியத்துவம் வாய்ந்தது :

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் பெருமுயற்சியால் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு அழகிய கற்சிலைகள், செப்புத் திருமேனிகள், இசைக்கருவிகள், விவசாயப் பொருட்கள், நில அளவை சாதனங்கள். காவிரி நதியின் டெல்டா காட்சியுடன் கல்லணைக் காட்சி போன்ற பல பொருட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கற்சிலைகளை ஆராய்ந்தபோது, 10, 11ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால அரிய புத்தர் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. அமர்ந்த கோலத்தில் தியான நிலையில் அமைந்துள்ள இந்த புத்தர் சிலை உடையாமல் முழுமையாக இருக்கிறது. தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகள் காண வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது இந்த அருங்காட்சியகம்” என்று கூறினார்.

First published:

Tags: Local News, Thanjavur