முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் ஏப்.21-ம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்..!

தஞ்சாவூரில் ஏப்.21-ம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்..!

ராணுவ வீரர்கள்

ராணுவ வீரர்கள்

Thanjavur | தஞ்சையில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந்தேதி நடக்கிறது.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்புக் குறைதீர் நாள் கூட்டம் ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

"தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் தங்களது குறைகளை 2 பிரதி மனுக்கள் மூலம் தங்கள் அடையாள அட்டையுடன் இணைத்து அளித்து பயனடையலாம்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களை சார்ந்தோர்களும் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கலாம்.

இதே போலவே கடந்த வாரம் ஏப்ரல் 13ம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கேட்டறிந்தார்.

First published:

Tags: Local News, Thanjavur