ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் முதல் நாள் சதய விழா நிகழ்ச்சியில் என்னென்ன நடந்தது தெரியுமா?

தஞ்சையில் முதல் நாள் சதய விழா நிகழ்ச்சியில் என்னென்ன நடந்தது தெரியுமா?

தஞ்சை

தஞ்சை

Raja Raja Cholan Sadhaya Vizha 2022 | மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 -வது சதய விழாவின் முதல் நாள் நிழச்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூட்டிய நாள் அவர் பிறந்த ஐப்பசி 16-ம் நாள் அன்று சதய விழாவாக தஞ்சாவூரில் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழனின் 1037 ஆவது சதய விழாவினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைக்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

பின்னர், மாலையில் திருமுறைப் பண்ணிசை, மாலையில் மங்கள இசை திருமுறை பன்னிசை, திருமுறையின் திரு நடனம்பரதநாட்டியம் ,நாதசங்கமம் நிகழ்ச்சி, வயலில் இசை,கவியரங்கம் என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது..

நிகழ்சியின் பாதியிலேயே மழை வெளுத்து வாங்கிய தொடங்கியது இருந்தும் பொதுமக்கள் பெரிதும் அதையெல்லாம் எண்ணாமல் அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

தொடர்ந்து இடைவிடாது 4 மணி நேரம் பெய்த மழை பெய்தது டென்ட் முழுவதும் குளம் போல் நிரம்பியது... இருந்தும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தஞ்சை டெல்டா ரோட்டரி சங்தால் உணவு வழங்கப்பட்டது பிறகு தொடர்ந்து 8:30 மணிக்கு கவியரங்கம் நடந்து முதல் நாள் நிழச்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சி பெரும் விமரிசையாக நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Published by:Arun
First published:

Tags: Local News, Raja Raja Chozhan, Thanjavur, Thanjavur Temple