Union
Budget 2023

Highlights

ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க

தஞ்சாவூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம் - இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

Thanjavur District | தஞ்சாவூரில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் நாளை (20-01-2023) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக, தஞ்சாவூரில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் 3ஆவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

Must Read : பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி? அரசு மருத்துவர் விளக்கம்

மேலும், வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Employment, Job Fair, Local News, Thanjavur