குஜராத் மாநிலம் சபர்மதி காளிகாம் பகுதியை சேர்ந்தவர் ராஜாபாய் - சரோஜ் தம்பதி. இவர்களின் மகள் சரிதா. இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்து கணவர் இறந்து விட்டார்.
இந்நிலையில் இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் இவரைத் திருமணம் செய்துள்ளார். இவர் இந்த பெண்ணை திருமணம் செய்து தனிக் குடித்தனம் நடத்திவிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தலை மறைவாகிவிட்டார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சரிதா மாயமான கணவரை மீட்டுத் தரக் கோரியும் மிரட்டல் விடும் கணவர் குடும்பத்தாரிடமிருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் புகார் அளித்துள்ளார்.

குஜராத் பெண்
மேலும் காவல் நிலையத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனுவை அளித்தார். இந்த சம்பவத்தை பார்த்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்கள் வேதனை அடைந்தனர்.
மேலும் இதுகுறித்து பேசிய சரிதா, ‘நான் குஜராத்தை சேர்ந்தவள். எனக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. 60 வயது முதியவர் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அதனால் மிகவும் மன வேதனை அடைந்தேன்.
அந்த நேரத்தில் ஒரத்தநாடு அருகே ஆம்பலா பட்டு பகுதியை சேர்ந்த விஜயகுமார், குஜராத்திற்கு வேலைக்கு வந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்து கொண்டார்.
விஜயகுமாரின் ஊருக்கு வந்த பிறகு தான் தெரிந்தது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருப்பது. இதனை மறைத்து தான் என்னை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது.
இருந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிறகு தன்னை தனி வீட்டில் வைத்து என்னுடன் குடும்பம் நடத்தி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு தலைமறை வாங்கி விட்டார். தற்போது நான் எட்டு மாதம் கர்ப்பிணியாக இருக்கிறேன்.
தங்க இடமில்லாமல் பேருந்து நிலையத்திலும் சாலை ஓரத்திலும் தங்கிப் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறேன். இருந்தும் கணவர் வீட்டில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறது என கண்ணீர் மல்க கூறினார் சரிதா.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.