Home /thanjavur /

வரத்து அதிகரிப்பால் கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு

வரத்து அதிகரிப்பால் கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி கல்லணையில் இருந்து 41,240 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேறி வருகிறது. நேற்று முன்தினம் 50ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறக்கப்படும் அளவு சற்று குறைந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், தற்போது, ஆங்காங்கே உள்ள அணைகள், குளம், குட்டைகள், நீரோடைகளில் நிரம்பி வருகின்றது. அதனால், தஞ்சாவூர் கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை அடைந்து அங்கிருந்து தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைகிறது. அந்த தண்ணீர் கல்லணையில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாற்றில் திறந்து விடப்படுகிறது.

    கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி கல்லணையில் இருந்து 41,240 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேறி வருகிறது. நேற்று முன்தினம் 50ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறக்கப்படும் அளவு சற்று குறைந்தது.

    கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 8,004 கன அடி, வெண்ணாற்றில் 8,007 கன அடி, கல்லணை கால்வாயில் 2,608 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    கல்லணை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறக்கப்படுவதால் கொள்ளிடம் மதகுகளின் கீழ் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் உள் நுழைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

    இதைக் காண சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் கூட்டம் கூடுதாலும் போலீசார் தரப்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி