ஹோம் /தஞ்சாவூர் /

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை: தஞ்சை பெரியகோயிலில் கூடிய சுற்றுலா பயணிகள்

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை: தஞ்சை பெரியகோயிலில் கூடிய சுற்றுலா பயணிகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    தஞ்சை பெரியகோயிலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சனி, ஞாயிறு, திங்கள் என்று மூன்று நாள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதாலும் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 15ம் தேதி வரை 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். பெரிய கோயிலை சுற்றி பார்த்து கட்டிடக் கலையை பார்த்து ரசித்தனர்.

    கோவில் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதே போல் தஞ்சை மணிமண்டப பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur