Home /thanjavur /

நாளை தஞ்சாவூரில் குடிநீர் நிறுத்தம் செய்யும் பகுதிகள் தெரியுமா?  

நாளை தஞ்சாவூரில் குடிநீர் நிறுத்தம் செய்யும் பகுதிகள் தெரியுமா?  

தஞ்சை - குடிநீர் சப்ளை நிறுத்தம்

தஞ்சை - குடிநீர் சப்ளை நிறுத்தம்

Thanjavur District News | தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணிகள் நடக்க இருக்கிறது. ஆகையால், வெள்ளிக்கிழமை (செப் 9)  அன்று ஒரு நாள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என்று தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணிகள் நடக்க இருக்கிறது. ஆகையால், வெள்ளிக்கிழமை (செப் 9)  அன்று ஒரு நாள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என்று தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடைய செய்தி குறிப்பில், தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத் தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாயில் விளாங்குடிசாலை (திருவையாறு) மற்றும் கோர்ட்டு ரோடு ஆகிய பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த உடைப்பை சரி செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால் தஞ்சை மாநகரில் 1-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே பொதுமக்கள் தேவை யான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்வதுடன் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

இதனால் பொது மக்கள் நாளை விழிப்புடண் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி