முகப்பு /தஞ்சாவூர் /

பள்ளி வளாகத்தில் ஆபத்தாக உள்ள நீர்தேக்க தொட்டி.. சிவகாமிபுரம் மக்கள் வைத்த கோரிக்கை..

பள்ளி வளாகத்தில் ஆபத்தாக உள்ள நீர்தேக்க தொட்டி.. சிவகாமிபுரம் மக்கள் வைத்த கோரிக்கை..

X
பள்ளி

பள்ளி வளாகத்தில் ஆபத்தாக உள்ள நீர்தேக்க தொட்டி

Thanjavur Water Tank Issue : தஞ்சையில் பள்ளி அருகே இருக்கும் பழைய நீர் தேக்கத் தொட்டியை இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி அருகே சிவகாமிபுரம் பகுதியில் பள்ளி தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டில் இருந்தது. இந்த சிவகாமிபுரம் வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் அடங்கும். இதிலிருந்து வழங்கப்படும் தண்ணீர்தான் இப்பகுதி மக்களுக்கு பயனாக உள்ளது. இதன் தூண்கள் சிதிலமடைந்தது. இதன் அருகிலேயே தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து இருந்ததால் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் வேறு இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு அந்த பணியும் நிறுத்தப்பட்டது. இந்த இரண்டு இடங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டபோது தண்ணீர் ஊறியதால் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளிக்கு அருகில் தஞ்சை செல்லும் சாலையில் மீண்டும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. தொடர்ந்து இந்த புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.ஆனால் பழுதடைந்துள்ள நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இன்னும் இடித்து அப்புறப்படுத்தப்படவில்லை.

பள்ளி வளாகத்தில் ஆபத்தாக உள்ள நீர்தேக்க தொட்டி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் இதன் அடிப்புறம் கான்கிரீட் பெயர்ந்து அபாய நிலையில் உள்ளது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தற்போதே இந்த பழைய நீர்த் தேக்கத் தொட்டியை உடன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Thanjavur